என் வாழ்வில் ஆனந்தத்தை அள்ளித்தவளே... மகளின் 20-வது பிறந்தநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடிய குஷ்பு

First Published | Jan 25, 2023, 11:14 AM IST

நடிகை குஷ்பு, தனது இளைய மகள் அனந்திதாவின் 20-வது பிறந்தநாளை தனது கணவர் சுந்தர் சி உடன் சேர்ந்து கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த குஷ்பு கடந்த 2000-ம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி-யை காதல் திருமணம் செய்துகொண்டார். மும்பையை சேர்ந்த இவர், திருமணத்திற்கு பின் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

குஷ்பு - சுந்தர் சி தம்பதிக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். அவர்களு இருவரின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக தான் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்திற்கு அவ்னி சினிமேக்ஸ் என பெயரிட்டு இருந்தார் குஷ்பு. மீசைய முறுக்கு, அரண்மனை, நான் சிரித்தால் போன்ற வெற்றிப்படங்களை அந்நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார் குஷ்பு.

இதையும் படியுங்கள்... ராஜமவுலி உஷாரா இருங்க... உங்களை கொலை செய்ய ஒரு குரூப் சுத்திகிட்டு இருக்கு - எச்சரித்த பிரபல இயக்குனர்

Tap to resize

தற்போது அரசியலில் பிசியாக உள்ள குஷ்பு, அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் குஷ்பு ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் நடித்த காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. படத்தில் நீளத்தை கருத்தில் கொண்டு குஷ்புவின் காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாக படக்குழு தரப்பு விளக்கமும் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நடிகை குஷ்பு, தனது இளைய மகள் அனந்திதாவின் 20-வது பிறந்தநாளை தனது கணவர் சுந்தர் சி உடன் சேர்ந்து கொண்டாடி உள்ளார். இதுகுறித்த அழகிய புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, அந்த பதிவில், “4 வாரத்திற்கு முன்பே பிறந்த உன்னை 4 மணிநேரம் கழித்து தான் என் கையில் கொடுத்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை, உன் கையை பிடிக்கும்போதெல்லாம் உன் அன்பையும், அரவணைப்பையும் என்னால் உணர முடிகிறது. உன் பெயரைப் போலவே எங்களுக்கு ஆனந்தத்தை அள்ளித்தந்தவள் நீ. எங்கள் சின்னவளுக்கு 20-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்...  குக் ஆக களமிறங்கும் சிவாங்கி.. அஜித்தின் தம்பியும் இருக்காராம்- குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்கள் லிஸ்ட்

Latest Videos

click me!