வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டிக்கு ‘தளபதி 67’ கேங்ஸ்டர் லுக்கில் வந்த விஜய் - வைரலாகும் போட்டோஸ்

First Published | Jan 25, 2023, 12:04 PM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெற்றியடைந்ததை அடுத்து அப்படத்தின் சக்சஸ் பார்ட்டியை படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடி உள்ளார் தளபதி.

வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் ஆனது. விஜய் நாயகனாக நடித்திருந்த இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார். தில் ராஜு தயாரிப்பில் உருவான இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்திருந்தார். இதுதவிர ஷியாம், பிரகாஷ் ராஜ், சம்யுக்தா, சங்கீதா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

குடும்ப உறவுகளை மையமாக வைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் எடுக்கப்பட்டிருந்த இப்படம் பேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவரும் வகையில் இருந்ததால் 2 வாரங்களைக் கடந்தும் வெற்றிநடை போட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இப்படம் உலகளவில் ரூ.250 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... என் வாழ்வில் ஆனந்தத்தை அள்ளித்தவளே... மகளின் 20-வது பிறந்தநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடிய குஷ்பு

Tap to resize

வாரிசு படத்தின் வெற்றியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் தில் ராஜு, இயக்குனர் வம்சி ஆகியோருடன் கேக்வெட்டி கொண்டாடிய விஜய், தற்போது படக்குழுவினர் அனைவரையும் அழைத்து சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அப்படத்திற்கான கேங்க்ஸ்டர் செம்ம மாஸாக கெட் அப்பில் வந்து வாரிசு படத்தின் சக்சஸ் பார்ட்டியில் கலந்துகொண்டார்.

இதுதவிர நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ராதிகா, சம்யுக்தா, சங்கீதா, நடிகர்கள் ஷியாம், பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், பாடலாசிரியர் விவேக், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன் உள்பட படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... ராஜமவுலி உஷாரா இருங்க... உங்களை கொலை செய்ய ஒரு குரூப் சுத்திகிட்டு இருக்கு - எச்சரித்த பிரபல இயக்குனர்

Latest Videos

click me!