எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டிற்கு இந்த வாரம் குட் பை சொன்ன போட்டியாளர் இவர் தான்!

Published : Oct 19, 2024, 05:00 PM IST

Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து 2-ஆவது வாரத்தில் மக்களில் வாக்குகள் அடிப்படையில், எலிமினேட் ஆகி இருக்கும் போட்டியாளர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

PREV
15
எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டிற்கு இந்த வாரம் குட் பை சொன்ன போட்டியாளர் இவர் தான்!
Bigg Boss Tamil Season 8

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, இந்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கிய நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்கள் உள்ளே வந்த சில மணி நேரத்திலேயே ஆட்டத்தை துவங்கி விட்டார் பிக் பாஸ். கடந்த முறை இரண்டு வீட்டில் போட்டியாளர்களை பிரித்து போட்டு, ஆட்டம் காட்டிய பிக்பாஸ், இந்த முறை ஒரே வீட்டில் ஆண் போட்டியாளர்கள் மற்றும் பெண் போட்டியாளர்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாட வைத்து வருகின்றனர்,
 

25
Ravindher Chandrasekar

அதேபோல் ஒருவருக்கொருவர்,  தனி தனி ஸ்டேட்டர்ஜியை பயன்படுத்தி ஒன்றுமே தெரியாதது போல் விளையாடி வருகிறார்களா? என்கிற சந்தேகமும் இவர்களின் ஆட்டத்தை பார்க்கும் போது ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய 24 மணி நேரத்திலேயே, மகாராஜா பட நடிகை சாச்சனாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்து வெளியே அனுப்பிய நிலையில், அவரை மீண்டும் வைல்ட் கார்டு மூலம் உள்ளே கொண்டு வந்தார்.

காதலியை கூடவே அனுப்பிட்டு... பொண்டாட்டியை பின்னாடியே அனுப்புகிறதா பிக்பாஸ்? வேற லெவல் வைல்ட் கார்டு என்ட்ரி!
 

35
Vijay Sethupathi

அதே போல் கடந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் இருந்து மக்களின் வாக்குகள் அடிப்படையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறினார். இவரை தொடர்ந்து இந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சற்று முன் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார் என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது.
 

45
Bigg Boss This Week Eviction Process

இந்த வாரம் நாமினேஷனில், விஜே விஷால், தர்ஷா குப்தா, சௌந்தர்யா, ரஞ்சித், கானா ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்னவ், சாச்சனா என மொத்தம் பத்து போட்டியாளர்கள் சிக்கி இருந்தனர். இவர்களில் விஜே விஷால் மற்றும் சௌந்தர்யா அதிக வாக்குகளை பெற்று லீடிங்கில் இருப்பதாகவும், இவர்களுக்கு அடுத்தபடியாக முத்துக்குமரன், ரஞ்சித், தீபக், ஜாக்குலின், சாச்சனா ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் குறைவான வாக்குகளை பெற்று தர்ஷா குப்தா மற்றும் அர்னவ் ஆகியோர் கடைசி இடத்தில் இருப்பதால் இவர்களில் ஒருவர்தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு அதிகம் என ஏற்கனவே கூறப்பட்டது.

Diwali OTT Release Movies: தீபாவளி விருந்தாக ஓடிடியில் ரிலீசாகும் 2 சூப்பர் ஹிட் படங்கள்?
 

55
Arnav Eliminated

எலிமினேட் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடித்து கொண்டிருக்கிறாரா? பல விஷயங்களில் ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய அர்னவ் தான் வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் இவ்வளவு சீக்கிரம் வெளியேறுவார் என்பது ரசிகர்கள் எதிர்பாராதது என்றே கூறலாம்.
 

Read more Photos on
click me!

Recommended Stories