காதலியை கூடவே அனுப்பிட்டு... பொண்டாட்டியை பின்னாடியே அனுப்புகிறதா பிக்பாஸ்? வேற லெவல் வைல்ட் கார்டு என்ட்ரி!

Published : Oct 19, 2024, 04:01 PM ISTUpdated : Oct 19, 2024, 04:21 PM IST

Bigg Boss Tamil Season 8: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே செல்ல உள்ள பிரபல சீரியல் நடிகை குறித்த தகவல் வெளியாகி, நிகழ்ச்சி மீதான சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்துள்ளது.  

PREV
15
காதலியை கூடவே அனுப்பிட்டு... பொண்டாட்டியை பின்னாடியே அனுப்புகிறதா பிக்பாஸ்? வேற லெவல் வைல்ட் கார்டு என்ட்ரி!
Bigg Boss tamil season 8

ஹிந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் துவங்கப்பட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் முதல் சீசனில் இருந்த சுமார் ஏழு சீசன்களாக தொகுத்து வழங்கி வந்தார். ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்த நிலையில், அவற்றை தன்னுடைய நேர்த்தியான பேச்சால்... திறமையாக கையாண்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை கமல்ஹாசனையே சேரும்.

25
Kamal Haasan

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான, சிறந்த நாவல்கள், சிறுகதைகள், புத்தகங்கள், எழுதிய எழுத்தாளர்களை பெருமை படுத்தும் மேடையாகவும் பிக் பாஸ் மேடையை கமலஹாசன் பயன்படுத்தினார். அதே சமயம் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய பின்னர், கமல்ஹாசனின் அரசியல் பேச்சும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் அடிபட்டது, நெருடல்களை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கவில்லை என்றும், தன்னுடைய திரைப்பட பணிகள் காரணமாக இதில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். பின்னர் விஜய் டிவி தரப்பும் இந்த தகவலை உறுதி செய்தது.

பிஸியான அனிருத்.. கடுப்பில் கன்னா பின்னானு சம்பளத்தை ஏற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் கீரவாணி?

35
Vijay sethupathi

கமலஹாசன் விலகியதால், விஜய் சேதுபதி பிக் பாஸ் சீசன் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக மாறி, முதல் நாளே பிக் பாஸ் நிகழ்ச்சியின் 106 நாட்கள் சிறப்பாக நடத்துவதற்கான நம்பிக்கையை ரசிகர்கள் மனதில் விதைத்தார். மேலும் ஒரு தொகுப்பாளராக மட்டுமின்றி, ரசிகராகவும் மாறி விஜய் சேதுபதி போட்டியாளர்களை கேள்வி மேல்... கேள்வி கேட்டு வறுத்தெடுத்தது ரசிகர்களை கவர்ந்தது. இதைத்தொடர்ந்து இன்று விஜய் சேதுபதி போட்டியாளர்களை விசாரிக்க மாஸாக  தயாராகி உள்ளதும், முதல் ப்ரோமோவிலேயே தெரிந்தது. மேலும் இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ள இரண்டாவது போட்டியாளர் யார் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 

45
Divya Sridhar and Arnav

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு புறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு என்ரியாக, பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள பிரபல சீரியல் நடிகை பற்றிய தகவல் தான் கசிந்துள்ளது. அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும், விஜய் டிவி செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ்வின் மனைவியும், செவ்வந்தி, கேளடி கண்மணி, மகராசி, போன்ற தொடர்களில் நடித்த பிரபலமான நடிகை திவ்யா ஸ்ரீதர் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளாராம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

தலைவரின் வேட்டையனை வாஷ் அவுட் செய்ய அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் 7 புதிய படங்கள்!

55
Bigg Boss New Wild Card Entry

பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் அர்னவ், தன்னுடன் செல்லம்மா சீரியலில் நடித்து வந்த அன்ஷிதாவை காதலிப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், இருவரும் ஒன்றாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் இதுவரை அவர்கள் நடிப்பதாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திவ்யா ஸ்ரீதர் உள்ளே சென்றால்...  தரமான சம்பவம் நடக்க உள்ளது உறுதி!!

Read more Photos on
click me!

Recommended Stories