பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷிகா விஷாலுக்கு கொடுத்த காதல் பரிசு; என்ன தெரியுமா?

First Published | Dec 16, 2024, 11:43 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் வெளியேறிய நிலையில், நடிகை தர்ஷிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது விஷாலுக்கு கொடுத்த காதல் பரிசு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
 

Bigg Boss Tamil Season 8

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, கிட்டத்தட்ட 70 நாட்களை கடந்து விட்டது . 100 நாட்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த போட்டி முடிவுக்கு வர இன்னும் ஒரு மாதமே எஞ்சி உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் கடந்த இரண்டு வாரமாக டபுள் எவிக்ஷன் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஆர் ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டனர். 
 

Sathya SK Eliminated

இந்த வாரம் யாரும் எதிர்பாராத போட்டியாளரான சத்யா வெளியேறினார். ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டில் மிகவும் சேப் கேம் விளையாடியதாகவே பார்க்கப்பட்டது. முதல் நாளே சத்யா வெளியேறிய நிலையில், ஞாயிற்று கிழமை அன்று விஷால் மற்றும் தர்ஷிகா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறுவது கன்ஃபாம் ஆன நிலையில், பிக்பாஸ் ஹவுஸ் மேட்சே தர்ஷிகா கடந்த சில வாரங்களாக காணாமல் போய் விட்டார் அவர் எங்கே என்று தேடும் நிலை தான் இருந்தது. எனவே அவர் தான் வெளியேற உள்ளதாக தெரிவித்தனர். இறுதியாக தர்ஷிகா வெளியே அனுப்பட்ட நிலையில், விஷால் நூல் இழையில் தப்பினார்.

தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளையராஜா பாடல் இந்த தமிழ் பாடலா?
 

Tap to resize

VJ Vishal and Tharshika Love Story

தர்ஷிகா என்ன தான் விஷாலை காதலிப்பதாக கூறி, லவ் கன்டென்ட் கொடுத்தாலும் அது பெரிய அளவில் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இதற்க்கு காரணம் தர்ஷிகா உருகி உருகி காதலித்தாலும், விஷால் அதனை சீரியஸாக எடுத்து கொள்ளாமல் டயலாமோ மைட் செட்டில் தான் இருந்தார். எனவே மக்களே நீங்க காதல் கன்டென்ட் கொடுத்தது போதும் என கூறி அனுப்பி வைத்து விட்டதாகவே பார்க்கப்பட்டது.
 

Tharshika Eliminated

விஷால் இந்த வாரம், பழைய ஃபாமுக்கு வரவில்லை என்றால் அவரும் இந்த வாரம் வெளியேற்றப்பட வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது விஷாலை கட்டி அணைத்து உருகிய தர்ஷிகா, அவருக்கு காதல் பரிசாக தன்னுடைய அம்மாவின் மோதிரத்தை கொடுத்து விட்டு வந்துள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது உருகி உருகி காதலிக்கும் இந்த ஜோடி... வெளியே சென்ற பின்னரும் இதே போல் காதலிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கிரேட் எஸ்கேப் ஆன நடிகை; காசுக்காக இரண்டாம் திருமணம் செய்தவரை கண்டீஷன் போட்டு கொள்ளும் நடிகர்!
 

Tharshika Gift For VJ Vishal

மேலும் விஜய் சேதுபதியிடம் வெளியே வந்து பேசிய தர்ஷிகாவுக்கு அவருடைய பிக்பாஸ் பயணம் குறித்த வீடியோ போட்டு காண்பிக்கும் போது அவர் அதிகமாக விஷாலுடன் இருக்கும் காட்சிகள் தான் இடம் பெற்றது. இதை பார்த்து வெட்கப்பட்டு சிரித்த தர்ஷிகாவிடம் விஜய் சேதுபதி, இப்போது நீங்கள் எங்கு சறுக்கினீர்கள் என தெரிகிறதா என கேட்டு அவருக்கு புரியும் படி சில வார்த்தைகளை கூறி வெளியே அனுப்பினார்.

Latest Videos

click me!