அது நான் இல்லைங்க; அரசு சொத்தை விலைக்கு கேட்ட விவகாரம்! விளக்கம் கொடுத்த விக்கி

First Published | Dec 16, 2024, 10:01 AM IST

Vignesh Shivan : நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், பாண்டிச்சேரியில் அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

Vignesh Shivan

நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், தமிழில் நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம், போடா போடி, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கத்தில் அடுத்தபடியாக லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, சீமான், கெளரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Vignesh Shivan, Nayanthara

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இப்படத்தில் இருந்து தீமா தீமா என்கிற பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... அரசு சொத்தையே விலைக்கு கேட்டாரா நயன்தாரா கணவர்.? அதிர்ச்சியில் உறைந்த அமைச்சர்

Tap to resize

Nayanthara Husband Vignesh Shivan

இதனிடையே அண்மையில் புதுச்சேரி சென்றிருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் அங்கு அம்மாநில சுற்றுலாத்துறை சந்தித்து பேசினார். அப்போது அவர் அங்குள்ள அரசுக்கு சொந்தமான சீகல் ஹோட்டலை விலைக்கு கேட்டதாகவும் அதற்கு அமைச்சர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அரசுக்கு சொந்தமானதை யாராவது விலைக்கு கேட்பார்களா என விக்னேஷ் சிவனை மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து வந்தனர்.

Vignesh Shivan Statement

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் சிவனே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, நான் பாண்டிச்சேரிக்கு என்னுடைய லவ் இன்சூரன்ஸ் பட ஷூட்டிங்கிற்கு அனுமதி கேட்பதற்காக சென்றிருந்தேன். அப்போது சுற்றுலாத்துறை அமைச்சரை சந்தித்தேன். அந்த சமயத்தில் என்னுடன் வந்தவர் அவருக்கு தேவையான சிலவற்றை பற்றி விசாரித்தார். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, என்னை விமர்சித்து மீம்ஸ் போட்டுள்ளனர். அதை நான் ரசித்தேன் என விக்கி விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் பணக்கார ஜோடி! விக்கி - நயனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Latest Videos

click me!