திரும்ப திரும்ப ஏமாற்றம் – கடைசியாக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கும் தமிழக டிஜிபி மகள்!

First Published | Dec 16, 2024, 7:43 AM IST

Daudee Jiwal Debut With Jayam Ravi New Movie: ஜெயம் ரவியின் 34ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக தமிழக டிஜிபியின் மகள் தவ்தீ ஜிவால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Daudee Jiwal

Daudee Jiwal Debut With Jayam Ravi New Movie: அடுத்தடுத்து சர்ச்சைளுக்கு நடுவில் ஜெயம் ரவியின் புதிய படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஏற்கனவே பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ஜெயம் ரவி மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்கின்றனர். இது சிவகார்த்திகேயனின் 25ஆவது படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

Jayam Ravi and Daudee Jiwal

ஆனால், இந்தப் படம் சூர்யாவுக்கான படமாக இருந்த நிலையில் கங்குவா கொடுத்த மோசமான விமர்சனத்தை தொடர்ந்து அந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். சூர்யாவுக்காக புறநானூறு என்று டைட்டில் கூட முடிவு செய்யப்பட்ட நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டது.

தற்போது அந்த் கதையில் அமரன் ஹீரோ சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படப்பிடிப்பும் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது எஸ்கே25 என்ற டைட்டிலில் படம் உருவாகி வருகிறது. இதில், என்ன சுவாரஸ்யம் என்றால் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா இந்தப் படத்தின் மூலமாக நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Tap to resize

Jayam Ravi 34th Movie

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த நிலையில் தான் ஜெயம் ரவியின் மற்றொரு படம் குறித்தும் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டாடா புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக தவ்தி ஜிவால் நடிக்கிறார். இவர், தமிழகத்தின் டிஜிபியான சங்கர் ஜிவாலின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Shankar Jiwal Daughter Daudee Jiwal

இந்த படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டுள்ளது. இதில், ஜெயம் ரவி மற்றும் தவ்தி ஜிவால் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. ஏற்கனவே தவ்தி ஜிவால் 2 படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதில் ஒரு படம் துருவ் விக்ரம் மற்றொரு படம் ஜீவா படம். இந்த இரு படங்களுமே கைவிடப்பட்டுள்ளது.

Daudee Jiwal

இந்த நிலையில் தான் தற்போது ஜெயம் ரவியின் 34ஆவது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில், மற்றொரு பிரபலமும் இணைந்துள்ளார். அதாவது இயக்குநர் பி வாசுவின் மகனான நடிகர் சக்தி வாசு நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Latest Videos

click me!