Bigg Boss Tamil season 8
பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் 8-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி தற்போது 70 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இன்னும் 1 மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய உள்ளதால் விஜய் டிவி அடுத்தடுத்து நான்கு புது சீரியல்களை களமிறக்க உள்ளது. அது என்னென்ன சீரியல் என்பதை பார்க்கலாம்.
Ayyanar Thunai Serial
அய்யனார் துணை
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் நாயகியாக நடித்து பேமஸ் ஆன மதுமிதா, விஜய் டிவியில் முதன்முறையாக நடிக்க உள்ள சீரியல் தான் அய்யனார் துணை. குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கும் இந்த சீரியலில் மதுமிதாவுக்கு ஜோடியாக அரவிந்த் நடிக்க உள்ளார். இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
Poongatru thirumbuma Serial
பூங்காற்று திரும்புமா
பிக் பாஸ் முடிந்த கையோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மற்றொரு சீரியல் தான் பூங்காற்று திரும்புமா. இந்த சீரியலில் சோபனா நாயகியாகவும், ஷமீர் நாயகனாகவும் நடிக்க உள்ளனர். இதில் சோபனா ஏற்கனவே முத்தழகு என்கிற சீரியலில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.