Keerthy Suresh wedding
கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கோவாவில் டிசம்பர் 12ஆம் தேதி அவரது திருமணம் நடந்தது.
Keerthy Suresh Weds Antony Thattil
கீர்த்தி தனது நீண்ட கால நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். துபாயை சேர்ந்த தொழிலதிபரான ஆண்டனி தட்டில் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர்.
Keerthy Suresh wedding in Goa
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்துகொண்ட இந்தத் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. கோவாவில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா உள்ளிட்ட முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்.
Keerthy Suresh
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டில் இருவருக்கும் ஐயங்கார் பிராமண குடும்பத்தின் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்த திருமண வைபவத்தில் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. படங்களில் கீர்த்தி சுரேஷ் சேலை அணிந்து மணப்பெண் கோலத்தில் ஜோலிக்கிறார். அவருடன் பிராமண மணமகன் போன்ற தோற்றத்தில் வேட்டி அணிந்து இருக்கிறார் ஆண்டனி.
Keerthy Suresh
பிராமண முறையில் திருமணம் நடைபெற்ற அதே நாள் மாலையில் ஆண்டனி குடும்பத்தின் கிறிஸ்தவ முறைப்படியும் மீண்டும் திருமணம் நடைபெற்றது. இதில் கீர்த்தியும் கிறிஸ்தவ முறையில் வெண்ணிற ஆடையில் பளிச்சென்று தோன்றுகின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த இரண்டு திருமணத்தின் படங்களும் வைரலாகப் பரவி வருகின்றன.