
விதவிதமான கான்செப்டில், எத்தனையோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. குறிப்பாக கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் யூடியூப் வைத்திருப்பவர்கள்... தினமும் பிக்பாஸ் பற்றி ஏதாவது தினுசு தினுசாக வீடியோ போட்டே கல்லாக்கட்டி விடுவார்கள்.
2017-ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டதில் இருந்து, தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வந்த உலகநாயகன் கமலஹாசன், தன்னுடைய திரைப்படப் பணி காரணமாகவும்.. ஏஐ டெக்னாலஜி குறித்து, அமெரிக்கா சென்று படிக்க உள்ளதாலும் அதிரடியாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தன்னால் தொகுத்து வழங்க முடியாது என அறிவித்தார். இதை தொடர்ந்து கமலஹாசன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான மூன்று நாட்களில், விஜய் டிவி தரப்பில் இருந்தும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. எனவே பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டதால், அடுத்த தொகுப்பாளர் யாராக இருக்கும் என சமூக வலைதளத்தில் பல்வேறு தகவல்கள் பரவின.
பல நடிகர் - நடிகைகளின் பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்ட நிலையில், இறுதியாக நடிகர் விஜய் சேதுபதி கமல்ஹாசனின் இடத்தை நிரப்ப உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6-ஆம் தேதி துவங்கிய போது, கமல்ஹாசனின் இடத்தை விஜய் சேதுபதி நிரப்புவாரா? என பல ரசிகர்கள் தொடர்ந்து சந்தேக கேள்விகளை முன் வைத்து வந்த நிலையில், இந்த கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 106 நாள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான நம்பிக்கையை அறிமுக நாளிலேயே ரசிகர்கள் மனதில் விதைத்தார் விஜய் சேதுபதி.
குறிப்பாக இவர் தன்னுடைய பாணியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நேர்த்தியாக தொகுத்து வழங்கியது ஹை லைட்டாக பார்க்கப்பட்டது. அதே போல் ரஞ்சித்தின் கவுண்டம்பாளையம் மற்றும் பீஷ்மர் திரைப்படம் குறித்து விஜய் சேதுபதி பேசியது கருத்து கவனிக்கப்பட்டது. அருண் பிரசாத் கலைக்காக நடிக்க வருபவர்கள் காசை எதிர்பார்க்க மாட்டார்கள் என கூறிய போது, நான் காசுக்காக தான் நடிக்க வந்தேன் என விஜய் சேதுபதி கூறியது அல்டிமேட் பதிலாக இருந்தது. அதேபோல் அர்னவ் நான் ஒரு ஆம்பளை என கூறியபோது இப்ப போய் என்ன ஆம்பள? பொம்பள? என நடுநிலையாக அவர் பேசியது ஒரு சிறந்த தொகுப்பாளராகவே அவரை ரசிகர்கள் மத்தியில் பார்க்க வைத்தது.
டாப் 10 TRP-யில் விஜய் டிவி தொடர்களை பந்தாடிய சன் டிவி! புதிய சீரியலால் சறுக்கிய 'சிங்கப்பெண்'!
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உலக நாயகன், கடைசியாக 130 கோடி சம்பளமாக பெற்ற நிலையில்... விஜய் சேதுபதிக்கு மொத்தம் 15 கோடி மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளமாக பெறுகின்றனர்? என்கிற தகவல் லீக் ஆகியுள்ளது.
பிலிமி பீட் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, "பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கானா பாடகர் ஜெஃப்ரி, 'வேற மாறி ஆபீஸ்' புகழ் சௌந்தர்யா நஞ்சுட்டன், ஆர் ஜே ஆனந்தி, மற்றும் முத்துக்குமரன் ஆகியோர் தான் இந்த சீசனில் மிகவும் குறைவாக சம்பளம் பெறும் பிரபலங்கள் என்றும், இவர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 10 ஆயிரம் மட்டுமே சம்பளமாக பெருகிறார்களாம்.
இவர்களுக்கு அடுத்தபடியாக, சீரியல் பிரபலங்களான அருண் பிரசாத், தர்ஷிகா, அக்ஷிதா, விஜே விஷால், சத்யா மற்றும் சுனிதா போன்ற நடிகர்கள் சீரியலில் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளமாக பெறுகிறார்களோ அதே சம்பளம் இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார்கள்.
டபுள் கேம் ஆடிய வைரமுத்து; MSV-க்கு எழுதிய அதே பாடலை ஏ.ஆர்.ரகுமானுக்கும் கொடுத்து ஹிட் பண்ணிட்டார்!
இதைத் தொடர்ந்து தொகுப்பாளினி ஜாக்குலின், நடிகையும் குக் வித் கோமாளி தர்ஷாகுப்தா ஆகியோர் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை சம்பளமாக பெறுகிறார்கள். இவர்களை தொடர்ந்து தொகுப்பாளர் தீபக் மற்றும் 24 மணி நேரத்திலேயே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய, மகாராஜா பட நடிகை சாச்சனா ஆகியோர் 30,000 சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் அனைவரை விட... பெரும் தொகையை பிக்பாஸ் வீட்டில் சம்பளமாக வாங்கி வருவது ரவீந்தர் மற்றும் ரஞ்சித் தான். இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு மட்டுமே சுமார் 50-ஆயிரம் சம்பளம் வாங்கி வருகிறார்கள். ஒருவேளை இவர்கள் 106 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து விளையாடினால்... 50 லட்சம் ரொக்க பரிசை விட இவர்கள் வாங்கும் சம்பளம் தான் இவர்களுக்கு ஜாக்பாட்.