Published : Dec 17, 2024, 02:44 PM ISTUpdated : Dec 17, 2024, 02:48 PM IST
Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில், இன்று கையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வது சந்தேகம் என கூறப்படுகிறது.
70-நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. எனவே இனி வரும் வாரங்களில் சிங்கிள் எவிக்ஷனுக்கு பதிலாக டபுள் எவிக்ஷன் நடக்கவே வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்து அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியதால், தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களின் எண்ணிக்கை 13-ஆக குறைந்துள்ளது.
26
Bigg Boss Tamil Season 8 Contestant
அதே போல் டைட்டில் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்கிற போட்டியும், பொறாமையும் போட்டியாளர்களுக்கு இடையே வெளிப்பட துவங்கியுள்ளதை நேரடியாகவே பார்க்க முடிகிறது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேட்டனாக விஷால் மாறியுள்ளார். ஜெஃப்ரி நாமினேஷன் ப்ரீ பாஸ் வென்றார். எனவே இவர்கள் இருவரை தவிர மற்ற 11 போட்டியாளர்களும், நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர். இந்த வாரமும் டபிள் எலிமினேஷன் கூட நடக்க வாய்ப்புள்ளதாக பிக்பாஸ் ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, இன்று போட்டியாளர்களுக்கு இடையே... பிக் பாஸ் புது டாஸ்க் ஒன்று கொடுத்தார். அனைவருக்கும் குறிப்பிட்ட கற்கள் கொடுக்கப்பட அதை போட்டியாளர்கள் தங்களின் பட்டனர் உதவியுடன் எதிர் அணியினர் கற்களை எடுக்காமல் பாதுகாக்க வேண்டும். இந்த போட்டியில் பவித்ராவும் ஜெஃப்ரியும் ஒரு அணியாக இணைந்து கற்களை காப்பாற்ற முயன்றனர். ராணவ் பவித்ராவிடம் இருந்து கல்லை எடுக்க முயலும் போது ஜெஃப்ரி ராணவ்வை கீழே அழுத்தியதில், ராணவ்வுக்கு தோல் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
46
Bigg Boss Task
வலியால் ராணவ் துடித்து கொண்டிருக்கும் போது கூட, சவுந்தர்யா, ஜெப்ரி, பவித்ரா ஆகியோர் அவன் டிராமா போடுகிறான் என கூறினர். அருண் தான் அவரை உடனடியாக கண்ஃபெஷன் அறைக்கு அழைத்து சென்றார். ஒருவரின் வலிக்கு கூட மதிப்பு கொடுக்காமல், வாயில் வந்ததை சக போட்டியாளர்கள் பேசி கொண்டிருக்கும் போது தான், ராணவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே ராணவ் கழுத்து வலியால் பிக்பாஸ் வீட்டில் துடித்த போது, அவரின் அம்மா பிக்பாஸுக்கு நேரடியாக போன் செய்து, என் மகனை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். அவனை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் போட்டியாளர்கள் கஷ்டப்படுத்வத்தை பார்க்க முடியவில்லை என கூறினாராம். ஆனால் பிக்பாஸ் உங்கள் மகன் அவரின் கனவை அடையவே இங்கு வந்துள்ளார். அனைத்தையும் கடந்து அவர் விளையாடி வருகிறார் நீங்கள் தைரியமாக இருங்கள் என கூறியுள்ளார்.
66
Raanav Leave Bigg Boss House
ராணவ் கழுத்து வலியால் துடித்ததை பார்த்து அவரின் அம்மா அன்று முழுவதும் தூங்காமல் இருந்ததால், அவருக்கு நெஞ்சி வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாகவும் அண்மையில் கொடுத்த பேட்டியில் கூறி இருந்தார். இதை தொடர்ந்து, தற்போது ராணவ் கையில் அடிபட்டு ஓய்வில் இருக்க வேண்டும் என கூறுவதாலும், பெற்றோர் மீண்டும் பிக்பாஸ் தரப்புக்கு அழுத்தம் கொடுப்பதாலும், ஒரு வேளை ராணவ் வெளியே செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.