Allu Arjun, Pushpa 2
Pushpa 2 Peelings Tamil Song Lyrics Taken From Nedunalvaadai Tamil Literature : ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் புஷ்பா 2. முதல் பாகம் வெளியாகி 3 ஆண்டுகளுக்கு பிறகு உருவான இந்தப் படம் கடந்த 5ஆம் தேதி திரைக்கு வந்தது. சுகுமார் இயக்கிய இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், சுனில், ராவ் ரமேஷ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்று பேன் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது.
Pushpa 2 The Rule, Rashmika Mandanna, Allu Arjun
படம் வெளியாகி 12 நாட்கள் கடந்த நிலையில் ரூ.1416 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. இந்தப் படம் வெளியான போது முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்த ரேவதி என்ற உயிரிழந்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒருநாள் இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு அர்ஜூன் இடைக்கால ஜாமீனில் வெளியில் வந்தார்.
Peelings Lyrics, Peelings Song Lyrics
எனினும், உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணின் குடும்பத்தாருக்கு அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் தான் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடலானது தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று இப்போது தகவல் வெளியாகி வருகிறது.
PEELINGS Tamil Song Lyrics
ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜூன் பாடும் பீலிங்க்ஸ் என்ற பாடலை கவிஞர் விவேகா எழுதியிருப்பார். இதில், மல்லிகா பாணத்தே அம்புகளோ கண்முன தும்புகளோ ஆம்பிலி பூனிலா நாம்புகளோ புஞ்சிரி தும்பிகளோ முல்லா மலரா மணி செண்டுகளோ நின் மொழி சுண்டுகளோ தேன் தேடி எத்துன வண்டுகளோ பூண்கிலா துண்டுகளோ என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். இந்த வரிகள் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையில் இடம் பெற்றுள்ள வரிகளாம். அதாவது பாட்டுடைத் தலைவனுக்காக பாட்டுடைய தலைவி பாடும் பாடல் இது.
PEELINGS Tamil Song Lyrics By Viveka
அந்த வகையில் அல்லு அர்ஜூனை நோக்கி ராஷ்மிகா மந்தனா இந்தப் பாடலை பாடும் விதமாக பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் வேறு மொழி படமாக இருந்தாலும் தமிழ் காவியங்களில் இடம் பெற்ற பாடல் வரிகளைக் கொண்டு பாடல் அமைக்கப்பட்டது ரசிகர்களை வியக்க வைக்கிறது. இதுவே தமிழ் படங்களில் இது போன்று காவியங்களை தழுவிய பாடல் வரிகள் இடம் பெறுவது என்பது அரிதான ஒன்றாக சொல்லப்படுகிறது.