தேசிய விருது அறிவிக்கப்பட்டும் வாங்க மறுத்த இளையராஜா - அதுவும் ஒன்னில்ல 2 முறை!

First Published | Dec 17, 2024, 1:04 PM IST

Ilaiyaraaja Refused to get National Award : இசைஞானி இளையராஜா தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டும் அதை 2 முறை நிராகரித்துள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.

Ilaiyaraaja

இந்தியாவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாக தேசிய விருது கருதப்படுகிறது. தமிழ் திரையுலகில் அதிக முறை தேசிய விருது வாங்கிய இசையமைப்பாளர்கள் என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இசைஞானி இளையராஜா தான். இதில் ஏ.ஆர்.ரகுமான் 7 தேசிய விருதுகளையும், இளையராஜா ஐந்து தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். ஆனால் இளையராஜா இரண்டு முறை தேசிய விருதை நிராகரித்த சம்பவம் பற்றி தெரியுமா... வாங்க பார்க்கலாம்.

Ilaiyaraaja National Awards

கடந்த 2015-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த படம் தாரை தப்பட்டை. இது இளையராஜாவின் ஆயிரமாவது படமாகும். இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அதை வாங்க மறுத்துவிட்டார் இளையராஜா. ஏனெனில் தாரை தப்பட்டை படத்தின் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கும், சிறந்த பாடல்களுக்காக கேரளாவை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்கிற இசையமைப்பாளருக்கும் விருது பகிர்ந்து வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... ஒரே ஒரு ஓட்டில் ஏ.ஆர்.ரகுமானிடம் தேசிய விருதை பறிகொடுத்த இளையராஜா!!

Tap to resize

Ilaiyaraaja Refused to get National Award

இதுதான் இளையராஜா தேசிய விருதை மறுக்க காரணமாக அமைந்தது. ஏனெனில் பின்னணி இசை, பாடல்கள் என தனித்தனியாக பிரித்து விருது தரக்கூடாது என நினைத்தார் இளையராஜா. அதன் காரணமாகவே அவர் அந்த ஆண்டு தேசிய விருதை பெற செல்லவில்லை. இப்படி இளையராஜா தேசிய விருதை புறக்கணிப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னதாக 2009-ம் ஆண்டு பழசிராஜா என்கிற படத்திற்காக இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டும் அதை வாங்க மறுத்துவிட்டார்.

Ilaiyaraaja Boycott National Award

தனக்கான விருதை இன்னொருவருடன் பகிர்ந்து கொடுக்கிறார்களே என்று ஒரு படைப்பாளனாக இளையராஜா கோபப்பட்டார். மேலும் இதுபற்றி அவரே ஒரு மேடையிலும் கூறி இருந்தார். சிறந்த பின்னணி இசை என ஒருவருக்கும், சிறந்த பாடல்கள் என ஒருவருக்கும் கொடுக்கிறார்கள். சிறந்த பின்னணி இசையை கொடுப்பவரால் சிறந்த பாடல்களை கொடுக்க முடியாதா என கேள்வி எழுப்பிய இளையராஜா, இதனால் தான் தனக்கு தேசிய விருதுகள் மீது மதிப்பு இல்லை என்று இளையராஜா வெளிப்படையாக கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... என் சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் நான் அல்ல! கோவில் அவமதிப்பு விவகாரம்; இளையராஜா விளக்கம்!

Latest Videos

click me!