ஒரே மாதிரியான டாலரை அணிந்திருக்கும் அஜித் – வைரலாகும் தீனா vs குட் பேட் அக்லி போட்டோஸ்!

First Published | Dec 17, 2024, 12:32 PM IST

Ajith Used Dheena Dollar in Good Bad Ugly Movie : தீனா படத்தில் அணிந்திருந்த அதே மாதிரியான டாலரைத் தான் அஜித் இப்போது குட் பேட் அக்லி படத்திலும் அணிந்திருப்பதாக கூறப்படுகிறது.

Ajith Used Dheena Dollar in Good Bad Ugly Movie

Ajith Used Dheena Dollar in Good Bad Ugly Movie : தன்னம்பிக்கை ஒன்றை மட்டுமே வைத்துக் கொண்டு சினிமாவில் கால் பதித்தவர் அஜித் குமார். ஆரம்பகாலகட்டங்களில் பல தோல்விகளையும் கடந்து வந்துள்ளார். ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டவர். பைக் மற்றும் கார் ரேஸ் பிரியர். தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பதோடு சரி, வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளமாட்டார்.

Ajith Kumar

தன்னை அஜித் குமார் என்று அழைத்தால் மட்டுமே போதும் என்று கூறிய அஜித் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார். அதில், கடவுளே அஜித் என்று தன்னை அழைப்பது குறித்து கூறியிருந்தார். இனிமேல் தன்னை யாரும் கடவுளே அஜித்தே என்று அழைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

Tap to resize

Ajith Kumar

இந்த நிலையில் தான் 2024 ஆம் ஆண்டு ஒரு படம் கூட வெளியாகாத அஜித் ரசிகர்களுக்கு 2025 ஆம் ஆண்டு டபுள் டிரிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய 2 படங்களுமே வரும் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி என்ற படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Good Bad Ugly

இந்தப் படத்தில் அஜித் ஒரு டாலர் அணிந்திருப்பார். இதே போன்று ஒரு டாலரை 23 ஆண்டுகளுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படத்தில் அஜித் தன்னுடைய கழுத்தில் அணிந்திருப்பார். அஜித் சினிமாவில் என்னெல்லாம் செய்கிறாரோ அதே போன்று அவரது ரசிகர்களும் செய்வது வழக்கம். தீனா படத்தில் சிறிய அளவிலான டாலரை அஜித் தன்னுடைய கழுத்தில் அணிந்திருப்பார். ஆனால், இப்போது குட் பேட் அக்லி படத்தில் அதனை பெரிய சைஸில் அணிருந்திருக்கிறார்.

Good Bad Ugly; Ajith Used Dheena Dollar in Good Bad Ugly Movie

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் தீனா படமும் ஒன்று. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையபடுத்திய தீனா படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார். இவர்களுடன் சுரேஷ் கோபி, ராஜேஷ், ஸ்ரீமன், அல்போன்ஸ் புத்ரன், மகாநதி சங்கர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

Good Bad Ugly

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கதில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!