
தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நடிகர் கார்த்தி, கடைசியாக கடந்த ஆண்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த 'ஜப்பான்' திரைப்படம், மோசமான விமர்சனங்களை பெற்று படு தோல்வியை சந்தித்த நிலையில், (செப்டமபர் 27) அதாவது இன்று, கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'மெய்யழகன்'. இந்த படத்தை, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ளார்.
அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ராஜ்கிரண், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இந்த படத்தை, சூர்யா - ஜோதிகா 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். குறிப்பாக 'பருத்தி வீரன்' படத்திற்கு பின்னர்... கார்த்தி கொஞ்சம் கிராமத்து சாயல் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாமன் - மச்சான் இடையே இருக்கும்... குறும்புத்தனம், பாசம், நட்பு, சண்டை, போன்ற விஷயங்களை மிகவும் அழகாக இந்த படத்தில் படமாக்கியுள்ளார் பிரேம்குமார். இந்த படத்தின் விமர்சனம் குறித்து, இந்த பதிவில் பார்ப்போம்.
ரசிகர் ஒருவர் தன்னுடைய விமர்சனத்தில் 'மெய்யழகன்' படத்தின் முதல் பாதி அருமை என்றும், எமோஷனலாக இந்த திரைப்படம் கனெக்ட் ஆகிறது. கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் காம்போ சூப்பர். குறிப்பாக கார்த்தியின் காமெடி கவுண்டர் தெறிக்க விடுகிறது. டெல்டா கல்யாணம் பாடல் மற்றும் அதன் விஷுவல் கண்ணுக்கு நிறைவாக இருக்கிறது. இப்படம் 96 படத்தின் ரெஃபரன்ஸ் போல் தோன்றுகிறது என தெரிவித்துள்ளார். இரண்டாவது பாதிக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
திரைப்பட விமர்சகர் அமுதா பாரதி, தன்னுடைய twitter-ல் மெய்யழகன் முதல் பாதி மிகவும் அழகாக உள்ளது. கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் காம்போ நிஜமாகவே பார்க்க அருமையாக உள்ளது. படம் மெதுவாக சென்றாலும், ரசிகர்களை ஊக்குவிக்கும் விதத்தில் கோவிந்த் வசந்தாவின் இசை... எந்த ஒரு இடத்திலும் ரசிகர்களை சோர்வடைய செய்யாமல்... ஒரே பிளோவில் கொண்டு செல்கிறது. இந்த திரைப்படத்தின் விஷுவல் மற்றும் வில்லேஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவாக இருக்கின்றன. கார்த்தியின் ஃபன் மொமெண்ட் மற்றும் அரவிந்த்சாமியின் மெச்சூர் பர்பாமன்ஸ் இந்த படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என தெரிவித்துள்ளார்.
இரண்டாவது பாதி குறித்து மற்றொரு ரசிகர் போட்டுள்ள பதிவில், இரண்டாவது பாதியும் முதல் பாதியை போலவே அழகான காட்சிகளை கொண்டுள்ளது. பயனற்றது என்று நாம் கருதும் ஒன்று, எப்படி மற்றவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பது பற்றிய குறிப்பு... நம் முன்னோர்களின் வரலாற்றை பெருமைப்படுத்துவது வரை குடும்பத்துடன் இணைப்பது வரை 'மெய்யழகன்' பல குறிப்பிடத்தக்க விஷயங்களை காட்டுகிறது. அரவிந்த்சாமி மற்றும் ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு மனதை திருடுகிறது என தெரிவித்துள்ளார்.
பலர் பாசிட்டிவ் விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில், ரசிகர் ஒருவர் 'மெய்யழகன்' திரைப்படம் ஒரு தோல்வி திரைப்படம் என பதிவிட்டுள்ளார்'. காரணம் அனைவரும் தேவாரா திரைப்படத்திற்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். இது ஜூனியர் என்டிஆர் ரசிகர் செய்த வேலையாகவே இருக்க கூடும் என நினைக்கத் தோன்றுகிறது.
இளையராஜா இசையில் உதடு ஒட்டாத வார்த்தைகளால்.. வாலி எழுதிய பாடல் எது தெரியுமா?
மற்றொரு ரசிகரும் மெய்யழகன் படத்திற்கு, ஜீரோ ரேட்டிங் கொடுத்துள்ள நிலையில்... இந்த படத்தின் பாசிட்டிவ் என்றால் கார் பார்க்கிங் டைம், ஸ்டார் கிரெடிட்ஸ், ஸ்மோக்கிங் குறித்த ஹெல்த் அட்வைஸ், இன்டர்வல் கேப், மற்றும் எண்டு கார்டு என தெரிவித்துள்ளார். நெகட்டிவ் என கூறி, மொத்த பாடமுமே நெகட்டிவ்வாக இருக்கிறது. இது ஒரு தோல்வி திரைப்படம் என்றும், இது தான் ஜெனியூன் ரேட்டிங் என கூறியுள்ளார்.
பிரபல நடிகரும் திரைப்பட விமர்சகர்மான கயல் தேவராஜ், 'மெய்யழகன்' படத்திற்கு 4/5 ஸ்டார்கள் கொடுத்துள்ளார். மேலும் குடும்ப உறவுகளைப் பற்றிய உன்னதமான விஷயங்களை மிகவும் உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கும் அக்மார்க் பொழுது போக்கு திரைப்படம் இது என கூறியுள்ளார்.