Actor Prabhas Injured
பிரபல நடிகர் பிரபாஸ், 'தி ராஜ சாப்' படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கினார். சண்டைக் காட்சியில் நடிக்கும் போது இவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, பிரபாஸுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சில வாரங்கள் கட்டயமாக பிரபாஸ் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Prabhas Movie Kalki Box Office
பிரபாஸ் நடித்து இந்த ஆண்டு ஜூன் மதம் 27 ஆம் தேதி வெளியான கல்கி 2898 AD படத்தை, இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். வைஜந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1200 கோடி வசூல் செய்தது.
Prabhas Apologies to Fans
தமிழ் படங்களுக்கு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், தற்போது கல்கி படத்தை
பிரபாஸ் காயம், படப்பிடிப்பில் காயமடைந்தார் பிரபாஸ், பிரபாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு, தமிழ் சினிமா செய்திகள், கல்கி ஜப்பான் ரிலீஸ் மொழியில் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். ஜனவரி 3-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக பிரபாஸ் படக்குழுவினருடன் ஜப்பான் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால், அங்கு செல்ல முடியாமல் போனதற்கு தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Raja Saab Movie
இந்த படத்திற்கு முன்னர் தற்போது மருதி இயக்கும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்த படத்தில் பிரபாஸ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். ஒரு பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க இன்னொரு நாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக சஞ்சய் தத் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் முரளி ஷர்மா, அனுபம் கீர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் சண்டை காட்சியில் ஏற்பட்ட காயம் காரணமாக படப்பிடிப்பு முடிவடைவதிலும், அடுத்தடுத்து இவர் நடிக்கும் படங்கள் துவங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் ஆரம்பிக்கவே இல்ல; அதற்குள் எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து இத்தனை பேர் விலகலா?