Riythvika : பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகாவுக்கு விரைவில் கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

Published : Jul 14, 2025, 09:29 AM IST

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் பங்கேற்று டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட ரித்விகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

PREV
14
Bigg Boss Riythvika Engagement

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அப்படி தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக டைட்டில் வென்ற பெண் போட்டியாளர் என்கிற சாதனையை படைத்தவர் ரித்விகா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அந்நிகழ்ச்சிக்கு முன்னரே சினிமாவில் நடித்து வந்தார் ரித்விகா. குறிப்பாக இவருக்கு அடையாளத்தை பெற்றுத்தந்த படம் என்றால் அது பா.இரஞ்சித்தின் மெட்ராஸ் திரைப்படம் தான். அப்படத்தில் நடிகர் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரித்விகா. இதையடுத்து ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தார்.

24
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா

நடிகை ரித்விகா முதன்முதலில் அறிமுகமானது பாலாவின் பரதேசி படத்தின் மூலம் தான். இதையடுத்து விக்ரமன் இயக்கிய நினைத்தது யாரோ படத்தில் நடித்த ரித்விகாவுக்கு மெட்ராஸ் படம் தான் திருப்புமுனை தந்தது. பின்னர் இருமுகன், ஒரு நாள் கூத்து, டார்ச் லைட் போன்ற படங்களில் நடித்த ரித்விகாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீசனில் சிறப்பாக விளையாடி டைட்டிலை ஜெயித்ததோடு, மக்கள் மனதையும் வென்றிருந்தார் ரித்விகா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரித்விகாவுக்கு படவாய்ப்புகளும் குவிந்தன.

34
ரித்விகா நிச்சயதார்த்தம்

அந்த வகையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, வால்டர், சில நேரங்களில் சில மனிதர்கள், கடாவர், ஆதார் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக ரித்விகா தேர்வு செய்து நடித்தாலும் அவருக்கு எந்த படமும் கைகொடுக்கவில்லை. இதனால் சினிமாவில் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போனார் ரித்விகா. சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிட்டால் நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விடுவார்கள். ரித்விகாவும் தற்போது அதே முடிவை தான் எடுத்திருக்கிறார். அவர் தற்போது திருமணத்துக்கு தயாராகி இருக்கிறார். அவரின் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துள்ளது.

44
ரித்விகாவின் வருங்கால கணவர் யார்?

தனது நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரித்விகா. அதன்படி அவர் தன்னுடைய நீண்ட கால நண்பரான வினோத் லட்சுமணன் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர். அவரின் இந்த பதிவுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ஜோடிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. திருமண தேதியை விரைவில் ரித்விகா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories