அடுத்தடுத்து சினிமா வாய்ப்பு; த்ரிஷாவால் நயன்தாராவின் மார்க்கெட் சரிகிறதா?

Published : Jul 13, 2025, 08:57 PM IST

nayantara market slipping because of trisha: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் 7 மாதங்களில் த்ரிஷா நடிப்பில் உருவான 3 படங்கள் வெளியான நிலையில் நயன்தாராவிற்கு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் ரசிகர்கள் அவரை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

PREV
15
நயனதாரா நடிக்கும் படங்கள், த்ரிஷா நடிக்கும் படங்கள்

nayantara market slipping because of trisha : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. சினிமாவைப் பொறுத்த வரையில் எந்த இடமும் யாருக்கும் நிரந்தரம் இல்லை. நேற்று நம்பர் 1 நடிகையாக இருந்தவர் இன்று நம்பர் 2 ஆக இருக்கலாம், நாளை அந்த இடமும் கூட கிடைக்காமல் போகலாம். காலமும் கதையும் தான் ஒரு நடிகையை முன்னணி நடிகையாக தீர்மானிக்கிறது.

25
த்ரிஷா vs நயன்தாரா

அந்த வகையில் ஐயா படம் மூலமாக ஹோம்லி லுக்கில் நடித்து ரசிகர்களின் அன்பையும், பாராட்டையும் பெற்றவர் நயன்தாரா. அதன் பிறகு சினிமாவைப் பற்றி தெரிந்து கொண்டு கொஞ்சம் அப்படி இப்படி என்று நடித்து ஏராளமான ஹிட் படங்களுடன் இன்று நம்பர் 1 நடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

35
நயனதாராவும் தமிழ் சினிமாவும், த்ரிஷாவும் தமிழ் சினிமாவும்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு படத்திற்கு குறைந்தது ரூ.15 கோடி முதல் ரூ.18 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார். நயன் தார தனது திருமணத்தை ஆவணப்படமாக வெளியிட அந்தப் படம் பெரியளவில் ரீச் கொடுக்கவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து டெஸ்ட் படத்தில் நடித்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறவில்லை.

45
த்ரிஷாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு

இப்போது நயன்தாரா நடிப்பில் மெகா157, டாக்ஸிக், மன்னாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ், பேட்ரியாட், மூக்குத்தி அம்மன் 2, ஹாய், ராக்காயி என்று 8 படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இந்தப் படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். ஆனால், இந்த ஆண்டில் டெஸ்ட் படம் வெளியாகியிருக்கிறது. அந்தப் படமும் தோல்வி படமாக அமைந்தது. இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது.

55
நயன்தாராவிற்கு மார்க்கெட் சரிகிறதா?

அந்த வகையில் இனி வரும் 2026 ஆம் ஆண்டு நயன்தாராவிற்கு திருப்பு முனையை ஏற்படுத்தக் கூடிய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் நயன் தாரா விட்ட இடத்தை இப்போது த்ரிஷா கெட்டியாக பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவில் கம்பேக் கொடுத்த த்ரிஷாவிற்கு இந்த ஆண்டில் விடாமுயற்சி, குட் பேட் அக்லீ மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, த்ரிஷா நடிப்பில் விஸ்வம்பரா மற்றும் கருப்பு, சூர்யா45 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்யக் கூடியது த்ரிஷாவாகத்தான் இருப்பார். தற்போது ஒவ்வொரு படத்திற்கும் ரூ.4 கோடி முதல் ரூ.10 கோடி வரையில் சம்பளம் பெறுகிறார். இனி வரும் காலங்களில் அவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அவரது சம்பளம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தற்போது 42 வயதாகும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories