pa ranjith vettuvam movie stunt master passes away : இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தின் ஸ்டண்ட் பயிற்சியாலர் மோகன் ராஜ் திடீரென்று உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
pa ranjith vettuvam movie stunt master passes away : சமீபகாலமாக சினிமா படப்பிடிப்பில் விபத்துகள் நடந்து வருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. தற்போது இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகி வருகிறது. அட்டகத்தி படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா ரஞ்சித். இந்தப் படத்தைத் தொடர்ந்து மெட்ராஸ் படத்தை இயக்கினார். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை அடுத்தடுத்து இயக்கி இயக்குநர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தார்.
25
பா ரஞ்சித் வேட்டுவம் படப்பிடிப்பு விபத்து
அதன் பிறகு சார்பட்டா பரம்பரை, விக்டிம், நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை இயக்கினார். கடைசியாக ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படம் வெளியானது. ஒரு இயக்குநராக மட்டுமின்றி நீலம் புரோடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், பொம்மை நாயகி, ஜே பாபி, பாட்டில் ராதா என்று பல படங்களை தயாரித்துள்ளார்.
35
வேட்டுவம் சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ்
தற்போது வேட்டுவம் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஆர்யா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது சீனியர் ஸ்டண்ட் கலைஞரான மோகன் ராஜ் (52) திடீரென்று உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியானது.
45
வேட்டுவம் சண்டைக் காட்சி
மேலும், சண்டைக் காட்சியை படமாக்கப்பட்ட போது அவர் ஜீப்பிலிருந்து குதிக்கும் போது விபத்து ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், உண்மையில், என்ன நடந்தது என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், மோகன் ராஜிற்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழுவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், கீழையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட விழுந்தமாவடி என்ற கிராமத்திலுள்ள அளப்பகுதியில் தான் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வேட்டுவம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த 10 ஆம் தேதி தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு காவல்துறை 12ஆம் தேதி வரையில் தான் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
55
வேட்டுவம் படப்பிடிப்பில் சண்டை பயிறசியாளர் உயிரிழப்பு
இந்த சூழலில் தான் இன்று காலை 10.40 மணியளவில் ஸ்டண்ட் பயிற்சியாளரான மோகன் ராஜிற்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.