Cook With Comali : இந்த வாரம் யாரும் எதிர்பாராத போட்டியாளர் வெளியேற்றம்! யார் தெரியுமா?

Published : Jul 13, 2025, 04:41 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
Cook With Comali Third Elimination Update

விஜய் தொலைக்காட்சி பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளது. அதேபோல் பல சீரியல்களையும் ஒளிபரப்பில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியின் முக்கிய ரியாலிட்டி ஷோவாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி விளங்கி வருகிறது. ஐந்து சீசன்களை முடித்த இந்த நிகழ்ச்சி, தற்போது ஆறாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது சீசன் 6 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

25
கோலாகலமாக துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 6

இந்த சீசனில் போட்டியாளர்களாக பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஷபானா ஷாஜகான், கஞ்சா கருப்பு, சௌந்தர்யா, ஜாங்கிரி மதுமிதா, உமைர் லத்தீப், பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு, மெரினா கடற்கரையில் உணவகம் நடத்தி வரும் சுந்தரி அக்கா, ஐடி விவசாயி நந்தகுமார் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கெடுத்து உள்ளனர். கோமாளிகளாக புகழ், குரேஷி, சரத், ராமர், சுனிதா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். புதிய கோமாளிகளாக சௌந்தர்யா நஞ்சுண்டன், பூவையார், டாலி, சர்ஜின் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். சீசன் நான்கு வரை நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விஜய் டிவியில் இருந்து வெளியேறி சன் தொலைக்காட்சியில் இதேபோல் ஒரு சமையல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

35
குக் வித் கோமாளி சீசன் 6-ல் புதிய நடைமுறை

வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக பங்கெடுத்து வரும் நிலையில், இந்த முறை சீசன் 6-ல் கௌஷிக் என்ற நடுவரும் புதிதாக இணைந்துள்ளார். வழக்கம்போல இந்த சீசன் 6-ஐ ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். முன்பு எப்போதும் போல் இல்லாத வகையில் இந்த முறை ஸ்கோர் போர்டு வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று வாரங்கள் சமையல் போட்டி நடக்கும். அதில் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து மூன்றாவது வாரம் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களை போட்டியிலிருந்து வெளியேற்றும் நடைமுறை துவங்கியுள்ளது. அதன்படி முதல் மூன்று வாரங்கள் முடிவில் சௌந்தர்யா குறைவான மதிப்பெண்கள் எடுத்து இருந்த நிலையில் அவர் முதல் ஆளாக எலிமினேட் செய்யப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டிருந்தார்.

45
மூன்றாவது ஆளாக வெளியேற்றப்பட்ட சுந்தரி அக்கா

அதேபோல் அடுத்த மூன்று வாரங்களின் மதிப்பெண்களின் கூடுதல் அடிப்படையில் கஞ்சா கருப்பு வெளியே அனுப்பப்பட்டிருந்தார். தொடர்ந்து மூன்றாவது எலிமினேஷன் யாராக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்த நிலையில் முதல் இரண்டு வாரங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் ராஜூ மற்றும் சுந்தரி இருவரும் கடைசி இரண்டு இடங்களை பிடித்திருந்தனர். மூன்றாவது வாரமான இன்று மீண்டும் இருவரும் கடைசி இரண்டு இடங்களையே பிடித்திருந்தனர். மூன்று வாரங்களில் எடுத்த மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பார்க்கும் பொழுது சுந்தரி கடைசி இடத்தை பிடித்திருந்தார். எனவே இந்த வாரம் சுந்தரி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

55
கண்ணீருடன் விடைபெற்ற சுந்தரி அக்கா

இந்த வாரம் பால் மற்றும் பால் பொருட்கள் சார்ந்து போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை சரிவர செய்ய முடியாததால் சுந்தரி இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அதே சமயம் ராஜூ நூலிழையில் தப்பி இருக்கிறார். சுந்தரி வெளியேறுவதற்கு முன்னர், “இதில் வெற்றியை தோல்வி என்று எதுவுமே இல்லை. விஜய் தொலைக்காட்சி என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. நான் இதற்காக நன்றி சொல்கிறேன்” என்று கூறி கண்ணீருடன் அவர் விடை பெற்றுக்கொண்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories