TRP-யில் எகிறி அடித்த எதிர்நீச்சல் 2; தூக்கிவீசப்பட்ட அய்யனார் துணை! இந்த வார டாப் 10 சீரியல் இதோ

Published : Jul 10, 2025, 04:23 PM IST

விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி சன் டிவி சீரியல்கள் தான் இந்த வார டிஆர்பி ரேஸில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. என்னென்ன சீரியல்கள் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளன என்பதை பார்க்கலாம்.

PREV
111
Top 10 Tamil Serial TRP Rating

சினிமாவுக்கு நிகராக சின்னத்திரை சீரியல்களுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. முன்பெல்லாம் சீரியல்களை டிவியில் மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால் தற்போது ஓடிடி தளங்களில் எந்த நேரம் வேண்டுமானாலும் சீரியல்களை பார்க்கும் வசதி வந்துவிட்டதால், ஒரு எபிசோடு தவரவிடாமல் மக்கள் பார்க்க தொடங்கிவிட்டார்கள். சீரியல்களின் தலையெழுத்தை தீர்மானிப்பது அதன் டிஆர்பி ரேட்டிங் தான். அதன் அடிப்படையிலேயே அந்த சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எந்த அளவு வரவேற்பு கிடைக்கிறது என்பது தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி நிலவரம் வெளியிடப்படும். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 26வது வாரத்திற்கான டாப் 10 டிஆர்பி பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் விஜய் டிவி சீரியல்களை காட்டிலும் சன் டிவி தொடர்கள் தான் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.

211
1. சிங்கப்பெண்ணே

சன் டிவியில் கடந்த இரண்டு வாரங்களாக முதலிடத்தை இழந்து தவித்து வந்த சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது. ஏனெனில் கடந்த இரண்டு வாரங்களாக மூன்று முடிச்சு மற்றும் மருமகள் ஆகிய சீரியல்களின் மகா சங்கமம் தான் முதலிடம் பிடித்திருந்தது. அது முடிவுக்கு வந்துள்ளதால் இந்த வாரம் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தை ஆக்கிரமித்து உள்ளது. கடந்த 9.88 புள்ளிகள் பெற்றிருந்த சிங்கப்பெண்ணே சீரியல் இந்த வாரம் 9.85 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

311
2. மூன்று முடிச்சு

ஸ்வாதி கொண்டே நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் கடந்த வாரம் வரை மகா சங்கமம் ஆக மருமகள் சீரியல் உடன் ஒளிபரப்பாகி வந்ததால் டிஆர்பி ரேஸில் 10.07 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் மகா சங்கமம் முடிவடைந்த பின்னர் டிஆர்பியில் சற்று சரிவை சந்தித்த இந்த சீரியல் 9.55 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

411
3. கயல்

சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 9.58 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் டிஆர்பியில் சரிவை சந்தித்து வெறும் 9.13 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.

511
4. மருமகள்

சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மருமகள். இந்த சீரியல் கடந்த வாரம் வரை மூன்று முடிச்சு தொடருடன் மகா சங்கமம் ஆக ஒளிபரப்பாகி வந்ததால், இதற்கு டிஆர்பியிலும் நல்ல முன்னேற்றம் இருந்ததோடு, முதலிடத்தையும் பிடித்து அசத்தியது. ஆனால் இந்த வாரம் மருமகள் சீரியல் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியலுக்கு 8.21 டிஆர்பி புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது.

611
5. எதிர்நீச்சல் தொடர்கிறது

இந்த வார டாப் 10 டிஆர்பி ரேஸில் ட்விஸ்ட் கொடுத்த சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான். திருச்செல்வம் இயக்கத்தில் வேல ராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, பார்வதி, கனிகா ஆகியோர் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், இந்த வாரம் ஐந்தாம் இடத்தை பிடித்து அசத்தி உள்ளது. கடந்த வாரம் 7.56 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருந்த எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல், இந்த வாரம் மளமளவென 2 இடங்கள் முன்னேறி 7.93 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

711
6. சிறகடிக்க ஆசை

விஜய் டிவி சீரியல்களுக்கு இந்த வாரம் ஏமாற்றம் தான். ஏனெனில் அதன் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை இதுவரை டாப் 4ல் இருந்து வந்த நிலையில், இந்த வாரம் 6ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. கடந்த வாரம் 8.05 டிஆர்பி புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருந்த இந்த சீரியல் இந்த வாரம் 7.85 புள்ளிகளுடன் 6ம் இடத்தை பிடித்திருக்கிறது.

811
7. அன்னம்

சன் டிவியில் கடந்த வாரம் வரை எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு செம டஃப் கொடுத்து வந்த அபி நக்‌ஷத்ராவின் அன்னம் சீரியல், இந்த வாரம் சரிவை சந்தித்து உள்ளது. கடந்த வாரம் 7.72 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் இருந்த அன்னம் சீரியல், இந்த வார டாப் 10 சீரியல்கள் பட்டியலில் 7.67 புள்ளிகளுடன் 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.

911
8. அய்யனார் துணை

இந்த வார டாப் 10 டிஆர்பி ரேஸில் கடும் சரிவை சந்தித்த சீரியல் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் தான். மதுமிதா நடித்துள்ள இந்த சீரியல் கடந்த வாரம் டாப் 10 பட்டியலில் 7.78 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் இருந்தது. ஆனால் இந்த வாரம் மளமளவென சரிந்து 8ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள இந்த சீரியல் 7.43 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது.

1011
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியில் ஸ்டாலின் நடிப்பில் அப்பா மகன் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இதில் ஸ்டாலின் மனைவியாக நிரோஷா நடிக்கிறார். இந்த சீரியல் கடந்த வாரம் 6.58 டிஆர்பி ரேட்டிங் உடன் 8ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் ஒரு இடம் பின்னுக்கு தள்ளப்பட்டு 6.40 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது.

1111
10 இராமாயணம்

புராண கதையம்சம் கொண்ட தொடரான இராமாயணம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஒரு டப்பிங் தொடராக இருந்தாலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத இதன் கதைக்காகவே இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் கடந்த வாரம் 6.24 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் 6.21 புள்ளிகளுடன் 10ம் இடத்தை பிடித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories