பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். இந்நிகழ்ச்சி இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்டது இந்தியில் தான். அங்கு இதுவரை 18 சீசன்கள் முடிவடைந்துவிட்டன. விரைவில் 19வது சீசன் தொடங்கப்பட உள்ளது. பிக் பாஸ் என்றாலே பல்வேறு புதுமைகள் நிறைந்திருக்கும். அந்த வகையில் பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக, ஏஐ ரோபோ ஒன்று போட்டியாளராக களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற ஆகஸ்ட் மாதம் பிக் பாஸ் சீசன் 19 இந்தியில் தொடங்கப்பட உள்ளது. இதில் ஏஐ போட்டியாளர் கலந்துகொள்ள உள்ளது பற்றி எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வராவிட்டாலும், கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.
25
பிக் பாஸில் ஏஐ போட்டியாளர்
பிக் பாஸ் சீசன் 19-ல் களமிறங்க உள்ள ஏஐ போட்டியாளருக்கு ஹபுபு என பெயரிட்டுள்ளார்களாம். இந்த ஹபுபுவை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஐ.எஃப்.சி.எம் என்கிற நிறுவனம் தான் உருவாக்கி உள்ளதாம். இந்த ஹபுபு இந்தியில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள பிக் பாஸ் சீசன் 19-ல் 16 போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெறும் என கூறப்படுகிறது. பிக் பாஸ் என்பது முழுக்க முழுக்க சர்ச்சைகளும், சண்டைகளும் நிறைந்த ஒரு நிகழ்ச்சி, அப்படி இருக்கையில் ஏஐ போட்டியாளர் உள்ளே சென்றால் எப்படி இதுபோன்ற விஷயங்களையெல்லாம் செய்யும் என்கிற சந்தேகமும் எழலாம். ஆனால் அதற்கு ஐ.எஃப்.சி.எம் நிறுவனம் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
35
யார் இந்த ஹபுபு?
ஏஐ போட்டியாளர் தானே என்று சாதாரணமாக எடைபோட வேண்டாம். இந்த ஹபுபு ரோபோவுக்கு அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை புரோகிராம் செய்திருக்கிறார்களாம். இதன்மூலமாக அது மனிதர்களுடைய எமோஷன்களை புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார் போல் பேசும் என்றும் அதுமட்டுமின்றி அடிப்படையான வீட்டு வேலைகளையும் அதனால் செய்ய முடியும் என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்கள். ஹபுபு பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றால் அது அங்குள்ள போட்டியாளர்களுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளும் என்றும் அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதனால் இந்த முறை இந்தி பிக் பாஸ் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக் பாஸில் ஒவ்வொரு சீசனும் ஒரு தீம்மை மையமாக வைத்து எடுப்பார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 19 ரீவைண்ட் என்கிற தீமை மையமாக வைத்து தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி இதற்கு முன்னர் நடந்த 18 சீசன்களில் என்னென்ன ஹைலைட்டான டாஸ்க்குகள் இருந்ததோ அதையெல்லாம் இந்த 19வது சீசனில் ரீ-கிரியேட் செய்ய உள்ளார்களாம். இதனால் ஒரு கிளாசிக்கான சீசனாக இந்த பிக் பாஸ் சீசன் 19 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஏஐ போட்டியாளரை களமிறக்க உள்ளதால், இது எப்படி ஒர்க் அவுட் ஆகும் என்பது பலரது கேள்வியாக உள்ளது.
55
கைகொடுக்குமா ஏஐ முயற்சி?
பொதுவாகவே ஏஐ என்றால் அதற்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கும். அதனால் அது சக போட்டியாளர்களை விட புத்திசாலித்தனமாக செயல்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஸ்பெஷல் புரோகிராமிங்கும் இந்த ஹபுபுவுக்கு செய்திருக்கிறார்களாம். இந்த ஏஐ போட்டியாளரால் பிக் பாஸ் சீசன் 19 தொடங்கும் முன்பே அதற்கான எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது. இந்த ஏஐ கான்செப்ட் ஒர்க் அவுட் ஆனால், அது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கொண்டுவரப்பட வாய்ப்புகள் இருக்கிறது.