பிக்பாஸ் ஹிந்தியில் கலக்கிய ஸ்ருதிகா வெளியிட்ட திருமண போட்டோஸ்!

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஸ்ருதிகா, தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு வெளியிட்ட போட்டோஸ் இப்போது அதிகம் பார்க்கப்பட்டு வருவோதோடு லைக்குகளையும் குவித்து வருகிறது.
 

15 வயதிலேயே சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதிகா

பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி தான் இந்த ஸ்ருதிகா. தாத்தாவை போல கண்ணழகை கொண்ட இவருக்கு, 15 வயதிலேயே ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை, கச்சிதமாக பயன்படுத்தி கொள்ள ஹீரோயினாக களமிறங்கிய ஸ்ருதிகாவுக்கு அடுத்தடுத்து தோல்விகளே மிஞ்சியது . எனவே ஒரு கட்டத்தில், இந்த நடிப்பெல்லாம் நமக்கு செட் ஆகாது என்பதை புரிந்து கொண்டு, படிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.

ஸ்ருதிகா மற்றும் அர்ஜுன் திருமண புகைப்படங்கள்

படிப்பை முடித்ததும், ஃபேஸ் புக் மூலம் காதலித்து வந்த அர்ஜுன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்தில் மகனையும் பெற்றெடுத்த ஸ்ருதிகா, தற்போது அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனந்தை நடத்தி வருகிறார். மேலும் இதுவரை வெள்ளி திரையில் தலைகாட்டவில்லை என்றாலும், சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருவதை பார்க்கமுடிகிறது.

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?


விஜய் டிவி குக் வித் கோமாளி & பிக்பாஸ் ஹிந்தி சீசன் 18

அந்த வங்கியில் ஸ்ருதிகா ஏற்கனவே விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சில் கலந்து கண்டு டைட்டில் வின்னராக மாறினார். இதை தொடர்ந்து, இந்த யாரும் யாரும் எதிர்பாராத விதமாக, இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் கலந்து கொண்டு, பாலிவுட் ரசிகர்களின் ஃபேவரட் போட்டியாளராக மாறினார். ஸ்ருதிகாவின் நேர்மையான விளையாடும், கள்ளம் கபடம் அற்ற குணமும் இவருக்கான வரவேற்பை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்தது. ஆனால் உள்ளே நண்பர்கள் கூறி ஸ்ருதிகாவிடம் பழகிய சிலர் இவரை நாமினேட் செய்து வெளியே அனுப்பினார். இது ஒரு அன்ஃபேர் எவிக்ஷனாக பார்க்கப்பட்டாலும், ஹவுஸ் மேட்ஸ் தேர்வு செய்து வெளியே அனுப்பியதால், இந்த வெளியேற்றத்தால் தவிக்க முடியாமல் போனது.

ஸ்ருதிகாவின் திருமண புகைப்படங்கள்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஸ்ருதிகா வெளியேறிய பின்னர், கோலிவுட் திரையுலகை விட பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஸ்ருதிகா தன்னுடைய 14-ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, சில திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, லைக்குகளை குவித்து வருகிறது. 14 வருட ஒற்றுமை மற்றும் இன்னும் வாழும் காலங்கள் பல உள்ளது. கல்லூரி நாட்களிலிருந்தே அவரை எனக்குத் தெரியும், அவர் என்னை என்றென்றும் நான் நானாக இருப்பதற்கு சுதந்திரம் கொடுத்தார். என் நல்லதுமற்றும்  கெட்டதை முழுமையாகப் பாராட்டினார், எங்கள் பயணத்தின் ஒவ்வொரு நாளையும் மகிமைப்படுத்தினார்.. இதைவிட அதிகமாக நான் கேட்டிருக்க முடியாது இப்படி ஒரு கணவர் கிடைக்க பாக்கியம் செய்தவராக உணர்கிறேன். என தெரிவித்துள்ளார்.

'அலைபாயுதே' படத்தில் ஷாலினி - மாதவனுக்கு முன்பு நடிக்க இருந்த நடிகர்கள் யார் தெரியுமா?

Latest Videos

click me!