தற்போது டிவி ஷோக்களில் பிசியாக இருக்கும் ராஜு, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதற்காக பல போட்டோ சூட்டுகளையும் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்கள் தான் இவை.
ராஜு ஜெயமோகன் என்னும் இயற்பெயரை கொண்ட ராஜு. கிராமத்திலிருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர். இவர் நடிகர், உதவி இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் மாடல் என பன் முகம் காட்டி வருகிறார்.
25
bigg boss raju
சினிமாவில் அவ்வளவாக வாய்ப்பு கிடையாததை அடுத்து சின்னத்திரைக்கு வந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்னும் தொடரில் நடித்தார். சரவணன் மீனாட்சி சீசன் 2, ஆண்டாள் அழகர், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னனு தெரியுமா திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர் சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 இவருக்கு நல்வாய்ப்புகளை அள்ளி கொடுத்தது. இந்த சீசன் வெற்றியாளராக ட்ராபியை தட்டி சென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி விட்ட ராஜு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதோடு முன்னதாக சாந்தனு நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்துள்ளார்.
தற்போது டிவி ஷோக்களில் பிசியாக இருக்கும் ராஜு, பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார். அதற்காக பல போட்டோ சூட்டுகளையும் நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்கள் தான் இவை.