90 களின் தொடக்கத்தில் என் காதல் கண்மணி மூலம் எண்ட்ரியான இவர்,தந்து விட்டேன் என்னை,, காவல் கீதம், மீரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் துருவம் என்னும் படத்தின் மூலம் மலையாளத்திலும் இதையடுத்து தெலுங்கிலும் அறிமுகமானார். இரு வருடங்களுக்கு பிறகு விக்ரம் மீண்டும் புதிய மன்னர்கள் மூலம் தமிழுக்கு வந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது.
மீண்டும் மற்றுமொழி பாதைக்கு திரும்பிய விக்ரம் 1997 ஆம் ஆண்டு உல்லாசம் என்னும் படத்தில் நடித்தார். பின்னர் மூன்று தமிழ் படங்களிலும் மலையாளம் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் தான் சேது. பாலா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருந்தார் விக்ரம். இரண்டாம் பாதியில் சியான் விக்ரமின் நடிப்பு பலரையும் பிரமிப்பில் ஆழ்த்தி இருந்தது. இந்த படத்திற்காக விருதையும் வென்றுள்ளார் விக்ரம்.