Heart Attack for Actor Vkram : நடிகர் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு...அவசர சிகிச்சையில் அனுமதி!

Published : Jul 08, 2022, 03:30 PM ISTUpdated : Jul 08, 2022, 04:51 PM IST

Actor vikram Admitted to hospital due to Heart attack : தன் மகனின் நடிப்பில் வெளியான இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாததை  எண்ணி மிகுந்த மன அழுத்தத்தில் விக்ரம் இருந்ததாக  கூறப்படுகிறது. 

PREV
16
Heart Attack for Actor Vkram : நடிகர் விக்ரமுக்கு திடீர் மாரடைப்பு...அவசர சிகிச்சையில் அனுமதி!
vikram

பிரபல நடிகர் விக்ரமுக்கு இன்று மதியம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீயானுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு 56 வயதிலும் கட்டுடல் மேனியுடன் ரசிகர்களை ஈர்த்து வரும் விக்ரம் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு  தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார்.

26
vikram

பின்னர் மீண்டெழுந்த அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்த காத்திருந்தார். நடிகர் விக்ரமுக்கு சைலஜா பாலகிருஷ்ணன் என்ற மனைவியும், துரு விக்ரம், அக்ஷிதா என்கிற இரு பிள்ளைகளும் உள்ளனர். இதில் விக்ரமின் மகன் "துரு" தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவரை முன்னணி  நடிகராக்க வேண்டும் என்கிற முனைப்பில் பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார் சியான் விக்ரம். அதில் ஒன்றுதான் "மகான்".

மேலும் செய்திகளுக்கு..இன்று திரையரங்குகளில் யோகி பாபுவின் பன்னிக்குட்டி! முன்னதாக வெளியான அப்டேட்டுகள்!

36
vikram

முன்னதாக துரு அறிமுகமான ஆதித்ய வர்மா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் விக்ரம் இருந்தும் அந்த படம் எடுபடவில்லை. அதற்கு அடுத்தபடியாக வெளியான மகான் படத்தில் மகனுடன் நடித்திருந்தார் விக்ரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விக்ரம் நெகடிவ் ரோலிலும் மகன் துரு நாயகனாகவும் நடித்திருந்தனர். இருந்தும் இந்தப் படம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை.

மேலும் செய்திகளுக்கு..Ponniyin Selvan Teaser : இன்று வெளியாகும் பொன்னியின் செல்வன் டீசர்.. யார் ரிலீஸ் செய்வது தெரியுமா?

தன் மகனின் நடிப்பில் வெளியான இரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாததை  எண்ணி மிகுந்த மன அழுத்தத்தில் விக்ரம் இருந்ததாக  கூறப்படுகிறது. 

46
vikram

இதற்கிடையே விக்ரம் மணிரத்னத்தின்  கனவு படமான பொன்னியின் செல்வனில் ஆதித்ய வர்மனாக நடித்துள்ளார். அதோடு இவர் நடிப்பில் கோப்ரா  படமும் தயாராகி வருகிறது. எப்பொழுதும் ஜிம் ஒர்க் அவுட் செய்து வரும் விக்ரம் அவரது வயதிற்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பார். இன்றும் உற்சாகமாக தன் நடிப்பை தொடரும் இவர் மற்ற நடிகர்கள் மத்தியில்  ஒரு ரோல் மாடலாகவே இருந்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு..ஸ்மைலிங் குயின் சாய்பல்லவி..கன்னம் சிவக்க..விதவிதமான போஸ்!

56
vikram

இந்நிலையில் விக்ரமிற்கு மாரடடைப்பு ஏற்பட்டது என வெளியாகும் செய்திகள் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திடகாத்திரமாக உள்ள நடிகருக்கு மாரடைப்பா? என பலரும் வாய்ப்பு இருந்து வருகின்றனர். அதோடு கொரானாவின் பிந்தைய பாதிப்பில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

ஆகஸ்ட் 11 -ம் தேதி வெளியாக உள்ள கோப்ரா  படத்திற்கான பிந்தைய வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் நடிகர் விக்ரமிற்கு திடீர் நெஞ்சு வலியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

66
vikram

Dhruv vikram மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது உறுதியாகி உள்ளது. பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விக்ரமுக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர் தற்போது நலமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. ரசிகர்களும், பிரபலங்களும்  விக்ரம் விரைவில் நலம் பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories