
ராதே ஷ்யாம் :
பாகுபலி நாயகன் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த மார்ச் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. காதல் நாடகமான இந்த படம் ரூ 350 கோடியை பட்ஜெட்டாக கொண்டிருந்தது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு பெறாமல் தோல்வியை சந்தித்தது. பட்ஜெட்டின் மதிப்பை விட மிகக் குறைந்த அளவே வருமானத்தை பெற்றிருந்தது. ராதே ஷ்யாம் ரூ.150 முதல் 214 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பட குழு அறிவித்தது.
ஆர் ஆர் ஆர் :
மார்ச் மாதத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மாஸ் காட்டியது. பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் அடுத்த பிரமாண்டமாக உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. உலகளவில் நல்ல பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனை பெற்ற இந்த படம் சுமார். ரூ. 1200 கோடியை வசூலித்தது. இதன் பட்ஜெட் ரூ.550 கோடி.
மேலும் செய்திகளுக்கு...ஸ்மைலிங் குயின் சாய்பல்லவி..கன்னம் சிவக்க..விதவிதமான போஸ்!
கே ஜி எப் 2:
யாஷ் நடிப்பில் வெளியாகி அதிரிபுதிரி வெற்றியை பெற்ற படம் தான் கேஜிஎப் 2. முந்தைய பாகம் கேஜிஎப் 2 குறித்த எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான இந்த படம் உலகம் முழுவதும் மாபெரும் சாதனையை படைத்தது. ரூ.1.250 கோடிகளை வசூல் சாதனையாக பெற்ற இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 100 கோடி மட்டுமே
மாறன் :
தனுஷ் நடிப்பில் கடந்த மார்ச் 11ஆம் தேதி வெளியான மாறன் படம். போதுமான வரவேற்பை பெறவில்லை. கார்த்திக் நரேன் என்பவர் இயக்கி இருந்த இந்த படத்தை சத்யஜோதி பிலிம் சார்பில் டிஜி தியாகராஜன் தயாரித்திருந்தார். இதில் மாளவிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளராக நடித்திருந்தார். இது எதிர்மறையான விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...Actor Vikram hospitalised : உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி!
ஹெச் வினோத்துடன் இரண்டாவது முறையாக இணைந்த அஜித்குமார் நடிப்பில் வெளியான படம் வலிமை. இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித் போலீஸாக நடித்திருந்தார். போனி கபூர் தான்இந்த படத்தையும் தயாரித்து இருந்தார்., 150 கோடி பட்ஜட்டில் தயாரான இந்தப் படம் 234 கோடிகளை வசூலாக பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் விமர்சன ரீதியில் இந்த படம் போதிய வரவேற்பு பெறவில்லை என்று தெரிகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற போதிலும் சரியான லாஜிக் இல்லை எனக் கூறி விமர்சகர் படத்திற்கு போதுமான ஸ்டார்களை கொடுக்கவில்லை என்று கூற வேண்டும். இந்த படத்தில் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பார். ஒரு மாலில் மாட்டிக் கொண்ட மக்களை எவ்வாறு நாயகன் காப்பாற்றுகிறார் என்பதை இந்த படத்தின் மையக்கருவாகும் ரூ.150 கோடியில் தயாரான இந்த படம் ரூ.250 கோடிகளை வசூல் செய்திருந்த போதிலும் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.
காத்து வாக்குல ரெண்டு காதல்
விஜய் சேதுபதி நயன்தாரா சமந்தா என மூவரின் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது. நகைச்சுவை கலந்த காதல் கதைக்களத்தை கொண்ட இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நயன்தாரா விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் 70 கோடிகளை வசூல் செய்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு...இன்று திரையரங்குகளில் யோகி பாபுவின் பன்னிக்குட்டி! முன்னதாக வெளியான அப்டேட்டுகள்!
டான் :
அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த டான் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே ஸ்டுடியோஸ் தான் தயாரித்திருந்தது. இந்த படம் 38 கோடி பட்ஜெட்டில் உருவாகி 106 கோடியை வசூல் சாதனையாக பெற்றது.
விக்ரம் :
கமலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் பான் இந்தியா மூவியாக வெளியாகியது. 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 442 கோடியை வசூல் செய்துள்ளது.