பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது. அந்நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2வது இடம் செளந்தர்யாவுக்கும், மூன்றாவது இடம் விஜே விஷாலுக்கும் கிடைத்தது. அவர்களை தொடர்ந்து பவித்ரா மற்றும் ரயான் கடைசி 2 இடங்களை பிடித்தனர். இந்த சீசன் முடிவடைந்த பின்னர் பிக் பாஸ் பிரபலங்கள் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும்போதே நிகழ்ச்சி முடிந்ததும் முதல் வேலையாக எங்கே செல்வீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது.
24
பருவதமலை செல்ல கட்டுப்பாடு
அதற்கு பவித்ரா, தான் பிக் பாஸ் முடிந்ததும் பருவதமலை செல்வேன் என சொல்லி இருந்தார். அந்நிகழ்ச்சியில் சொன்னபடியே தற்போது பருவதமலை கோவிலுக்கு சென்றிருக்கிறார் பவித்ரா. அதுவும் சிங்கிளாக இல்லை. தன்னுடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரையும் கூட்டிச் சென்றுள்ளார். அவர் வேறுயாருமில்லை.. பிக் பாஸ் சீசன் 8ல் டிக்கெட் டூ பினாலே வென்ற ரயான் தான். இருவரும் பருவதமலை சென்றபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் சுமார் 4560 அடி உயரத்தில் பருவதமலை அமைந்துள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலை மீது ஏற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி பருவதமலைக்கு காலை 5 மணி முதல் மதியம் 3 மணி வரை மட்டுமே ஏற முடியும். அதன் பின்னர் ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள். குறிப்பாக அங்கிருந்து அதிகாலை சூர்ய உதயத்தை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அதற்காகவே அங்கு அதிகப்படியான பக்தர்கள் செல்வார்கள்.
44
பருவதமலையில் பவித்ரா, ரயான்
அந்த வகையில் பிக் பாஸ் பிரபலங்களான ரயான் மற்றும் பவித்ரா இருவரும் அதிகாலையிலேயே பருவத மலை கோவிலுக்கு சென்றிருக்கிறார்கள். அங்கு எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. பவித்ரா இதற்கு முன்னதாக பல முறை பருவதமலை சென்றாலும் ரயானுக்கு இதுவே முதன்முறை ஆகும். அங்கு வந்திருந்த மக்கள் பவித்ரா மற்றும் ரயான் ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படங்களுக்கு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.