
தெலுங்கானாவை சேர்ந்த தயாரிப்பாளர் தில் ராஜு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும், வழங்கியும், விநியோகித்து உள்ளார். 2003 ஆம் ஆண்டு நித்தின் ஹீரோவாக வைத்து இயக்குனர் வி வி விநாயக் இயக்கத்தில் வெளியான 'தில்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஆர்யா, சித்தார்த் நடித்த பொம்மரியலு போன்ற படங்கள் அடுத்தடுத்து இவருக்கு வெற்றியை கொடுத்தது.
ஆரம்பத்திலேயே அதிக லாபம் பார்க்க துவங்கிய தில் ராஜு தீவிரமாக பட தயாரிப்பில் இறங்கினார். பல முன்னணி நடிகர்களை வைத்து தெலுங்கு படங்களை தயாரித்தார். மேலும் 2023 ஆம் ஆண்டு தளபதி விஜய்யை ஹீரோவாக வைத்து, இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவான 'வாரிசு' திரைப்படத்தின் மூலம் தமிழிலும் தயாரிப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் பிக் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் மிகப்பெரிய லாபம் இல்லை என்றாலும், முதலுக்கு மோசம் இல்லாத வசூலை பெற்றது.
ஓடிடி,யில் நானும் ரெளடி தான்...ஆனாலும் ஒரு சிக்கல்...ஏமாற்றத்தில் ரசிகர்கள்
இதே நம்பிக்கையில், தான் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான 'கேம் சேஞ்சா திரைப்படத்தையு'கேம் சேஞ்சா திரைப்பட சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தில் ராஜு தயாரித்திருந்தார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த் ,சுனில், ஜெயராம், சமுத்திரகனி, உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடலை மட்டுமே இயக்க 70 கோடி வரை செலவு செய்து எடுத்ததாக கூறப்பட்டிருந்தது. இன்ஃப்ரா ரெட் கேமரா மூலம் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டதாக கூறி இருந்தனர். பின்னர் ஒரு சில டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக இந்த பாடல் ஆரம்பத்தில் படத்தில் இணைக்கப்படாத நிலையில், பின்னர் மீண்டும் இணைத்து விட்டதாக பட குழுவினர் தெரிவித்தனர்.
இந்த படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருந்தார். விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற தவறிவிட்டது. காரணம் இந்த திரைப்படத்தை 50 முதல் 60 கோடி செலவில் இயக்கி விடலாம், இதற்கு ஏன் 400 கோடி செலவு செய்ய வேண்டும்? இயக்குனர் ஷங்கரின் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் இந்த படத்தில் மிஸ் ஆனதாக ரசிகர்கள் கூடி இருந்தனர். 400 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட இந்த படம், 178 கோடி மட்டுமே இந்த திரைப்படம் வசூல் செய்தது.
இந்த படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளர் தில் ராஜுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தில் ராஜு பட தயாரிப்பு விஷயத்தில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி கேம் சேஞ்சர் போல் இனி பிக்பட்ஜெட் படங்களை தயாரிப்பதை விட, குறைந்த மற்றும் மீடியம் பட்ஜெட்டில் நல்ல லாபத்தை கொடுக்கும் 'Sankranthiki Vasthunam' போன்ற படங்கள் படங்களை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.
பிக்பட்ஜெட் படங்களை ஆந்திராவில் தில் ராஜு போன்ற சில தயாரிப்பாளர்கள் மட்டுமே எடுத்து வந்த நிலையில், இவரின்... சில முன்னணி ஹீரோக்களுக்கு பாதகமாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. பிக்பட்ஜெட் படங்களை மட்டுமே சமீப காலமாக அல்லு அர்ஜுன், ஜூனியர் NTR, ராம் சரண், பிரபாஸ் போன்ற நடிகர்கள் டார்கெட் செய்து நடித்து வரும் நிலையில், இவர்களுக்கு ஆப்பு விதமாக இவரின் முடிவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
நைட் பார்ட்டியில் உச்ச கட்ட போதை; வெயிட்டருடன் அத்துமீறிய பால்கோவா நடிகை!