பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவடைய உள்ளது. இந்நிகழ்ச்சியில் முத்துக்குமரன், விஷால், ரயான், ஜாக்குலின், செளந்தர்யா, பவித்ரா ஆகிய 6 போட்டியாளர்கள் பினாலே வாரத்திற்கு முன்னேறினர். இவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இந்த சீசனுக்கான பணப்பெட்டி இந்த வாரம் பல்வேறு ட்விஸ்ட்களுடன் அனுப்பப்பட்டு உள்ளது. வழக்கமாக அதிக தொகை வந்த உடன் பணப்பெட்டி எடுப்பார்கள். ஆனால் இம்முறை அதை எடுக்கவும் டாஸ்க் வைக்கப்படுகிறது.
24
Bigg Boss Jacquline
அந்த டாஸ்கில் தோற்றால் அவர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்பதால் போட்டியாளர்கள் பயத்துடன் பணப்பெட்டி டாஸ்கை விளையாடி வருகின்றனர். அதில் முதலாவதாக 50 ஆயிரத்திற்கான டாஸ்கை முத்துக்குமரன் வென்றார். பின்னர் 2 லட்சத்திற்கான டாஸ்கில் ரயான் வெற்றி பெற்றார். அடுத்ததாக 2 லட்சத்துக்கான டாஸ்கில் பவித்ரா வெற்றி பெற்றார். பின்னர் வைக்கப்பட்ட 5 லட்சத்திற்கான டாஸ்கில் விஷால் வென்றார். இதையடுத்து 8 லட்சத்துக்கான டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் ஜாக்குலின் பங்கேற்றார்.
ஜாக்குலினுக்கு 35 விநாடிகளில் பணப்பெட்டியை எடுத்து வர வேண்டும் என கெடு விதிக்கப்பட்டது. ஆனால் அவர் பணப்பெட்டியை எடுத்து வர 37 விநாடிகள் ஆனதால், துரதிர்ஷடவசமாக ஜாக்குலின் இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். 101 நாட்கள் சிங்கப்பெண்ணாய் பிக் பாஸ் வீட்டில் விளையாடி வந்த ஜாக்குலின், பணப்பெட்டி டாஸ்கில் தோற்று எலிமினேட் ஆனது போட்டியாளர்கள் அனைவருக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது. ஜாக்குலினின் எவிக்ஷனால் போட்டியாளர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.
44
Bigg Boss Jacquline Salary
8 லட்சத்துக்கான பணப்பெட்டியை எடுக்க முடியாமல் ஜாக்குலின் எலிமினேட் ஆனாலும், அவருக்கு பிக் பாஸ் செம வெயிட்டான தொகையை சம்பளமாக வாரி வழங்கி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஜாக்குலினுக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அவர் 101 நாட்கள் அந்நிகழ்ச்சியில் இருந்ததால் அவருக்கு மொத்தமாக ரூ.25 லட்சத்து 25 ஆயிரம் சம்பளமாக கிடைத்திருக்கிறது. இருப்பினும் ஜாக்குலின் பைனல் மேடைக்கு செல்லும் வாய்ப்பை நழுவவிட்டது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.