லாட்விய இயக்குனர் கின்ட்ஸ் ஜில்பிலோடிஸின் "ஃப்ளோ" 97வது அகாடமி விருதுகளில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது. வெரைட்டியின் படி, படத்தில், ஒரு பெரிய வெள்ளம்; பூனையின் வீடு உட்பட எல்லாவற்றையும் மூழ்கடித்துவிட்டது. எங்கும் மனிதர்கள் இல்லை, ஆனால் அவர்களின் உடைமைகள் மட்டும் மிஞ்சியுள்ளன. அதிர்ஷ்டவசமாக "ஃப்ளோ"வின் பூனை கதாநாயகன், மற்ற வீடில்லாத விலங்குகள் நிறைந்த படகில் தஞ்சம் அடைகிறது. ஒன்றாக, அந்த குழு வெள்ள நீரில் பயணிக்கிறது.
பாரிஸை தளமாகக் கொண்ட சாரேட்ஸ் ("மிராய்," "ஐ லாஸ்ட் மை பாடி," "சிக்கன் ஃபார் லிண்டா!") திரைப்படத்தை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் அன்னிசி, ஒட்டாவா, குவாடலஜாரா மற்றும் மெல்போர்ன் திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றது.
ஆஸ்கார் விருதுக்கு முன், இந்த திரைப்படம் ஐரோப்பிய திரைப்பட விருதுகள், லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகள், நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்ட விருதுகள் மற்றும் கோல்டன் குளோப்ஸ் விருதுகளில் வென்றது. சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கார் விருது 'இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ்' படத்திற்கு கிடைத்தது.
இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமான் மட்டுமல்ல; இத்தனை இந்தியர்கள் ஆஸ்கர் வென்றுள்ளார்களா?