
நடிகர் மோகன் பாபுவின் (Mohan Babu) மகளும், நடிகையுமான மஞ்சு லட்சுமி இப்போது நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், இயக்குநராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். சினிமாவில் போதுமான வாய்ப்புகள் இல்லையென்றாலும் கிடைத்த வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். சினிமா துறையில் தனக்கென ஒரு தனித்துவமான பிம்பத்தை உருவாக்கிக் கொண்ட இவர், தனது ஆங்கிலப் புலமையால் இன்னும் பிரபலமாகிவிட்டார்.
தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த லட்சுமி மஞ்சு (Lakshmi Manju), இப்போது பாலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். தமிழில் கடல் படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் அடிபர்வம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதே போல் மஞ்சு லட்சுமியின் அப்பா மோகன் பாபு குடும்பம் பற்றி சொல்லவேண்டியது இல்லை. சில நாட்களுக்கு முன்பு, அவர் தனது இளைய மகன் மஞ்சு மனோஜுடன் சொத்து பிரச்சனையில் ஏற்பட்டது, பின்னர் ஊடகங்களிடம் மன்னிப்பு கேட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சொத்துக்காக குழந்தைகள் சண்டையிட்டதாக அவர்கள் கூறவில்லை, ஆனால் அது சிறிய வாக்குவாதங்கள் காரணமாக நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையான மோதல் என்ன காரணத்தால் ஏற்பட்டது என்பதன் குடும்ப தகவலை அவர்கள் வெளியே சொல்ல விரும்பவில்லை.
சொத்து தகராறுகள் நடந்து கொண்டிருந்தபோது, மஞ்சு லட்சுமி எல்லாவற்றையும் புறக்கணித்து மும்பையிலேயே இருந்தார். இந்த நிலையில் தான் மஞ்சு லட்சுமி தனது கணவர் ஆண்டி ஸ்ரீனிவாசனை விவாகரத்து செய்யப் போவதாக செய்தி தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மஞ்சு குடும்பத்தில் இருக்கும் மோதல்கள் போதாது என்று இப்போது இது வேறா என்று புலம்பும் அளவிற்கு சோஷியல் மீடியாவில் டிரோல் வெளியாகின. தற்போது இதற்கு பதிலளித்த மஞ்சு லட்சுமி, 'என் கணவர் ஸ்ரீனிவாஸ் வெளிநாட்டில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறார்.' நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம், ஆனால் சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை. சமூகத்தில் அமைதியாக வாழ்வதற்கான சுதந்திரத்தை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் சுதந்திரம், தனிப்பட்ட தனியுரிமை மற்றும் பொறுப்புக்கு முன்னுரிமை அளிக்கிறோம். நாங்கள் எங்கள் விருப்பப்படி வாழ்கிறோம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுவதன் மூலம் நாம் நம் மகிழ்ச்சியைக் கெடுத்துக் கொள்வதில்லை. "இப்போது எங்கள் மகள் அவரது தந்தையுடன் இருக்கிறாள்," என்று கூறியுள்ளார்.
லட்சுமி இப்போது மும்பையில் குடியேறிவிட்டார். டோலிவுட்டில் சரியான வாய்ப்புகள் கிடைக்காதது தான் இதற்க்கு காரணம் என கூறப்படுகிறது. நன்கு ஆங்கில புலமை கொண்ட மஞ்சு லட்சுமி, ஹிந்தி மொழியும் அறிந்தவர். பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு மிகவும் நெருக்கமானவர். எனவே அங்கேயே தங்கி தற்போது பாலிவுட் படங்களுக்கு வலைவிரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.