டோலிவுட் நடிகர் நாக சைதன்யா (Naga Chaitanya), சாய் பல்லவி (Sai Pallavi) நடிப்பில் , சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘தண்டேல்’ (Thandel). சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது.
25
பாக்ஸ் ஆபிசில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை:
இதுவரை உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிசில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது. அதுமட்டுமின்றி, நாக சைதன்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படமாகவும் இது அமைந்தது. தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
பிப்ரவரி 7ஆம் தேதி வெளியான இந்த படம், ஓடிடி ரிலீசுக்கு தற்போது தயாராகி உள்ளது. அதன்படி மார்ச் 7 முதல் நெட்ஃபிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். இந்த தகவலை தற்போது நெட்ஃபிக்ஸ் ஓடிடி நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
45
எந்த சூழ்நிலையிலும் விட்டுவிட மாட்டோம்
வெளியான நாள் முதல் நாளே பாசிட்டிவ் விமர்சனங்களுடன் நல்ல ஓப்பனிங்கை கண்ட இந்த திரைப்படம் பைரசி பிரச்சனையிலும் சிக்கியது.HD பிரிண்ட் ஆன்லைனில் கிடைத்தது படக்குழுவினரை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பைரசியில் ஈடுபடுபவர்களை எந்த சூழ்நிலையிலும் விட்டுவிட மாட்டோம் என்று தயாரிப்பாளர் பன்னி வாசு, அல்லு அரவிந்த் ஆகியோர் கூறினார். ஆனால் இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து இந்த படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது.
குறிப்பாக நாக சைதன்யா, சாய் பல்லவியின் நடிப்பு, சந்து மொண்டேட்டியின் இயக்கம் படத்திற்கு பலம் சேர்த்தது. தேவிஸ்ரீபிரசாத்தின் இசை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தபின்னர் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.