'அயன்' படத்தில் சூர்யாவுக்கு முன் நடிக்க இருந்த ஹீரோ இவரா? மிஸ் பண்ணிட்டு ஃபீல் பண்ணிய நடிகர்!

Published : Mar 02, 2025, 04:52 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'அயன்' இந்த படத்தில் சூர்யாவுக்கு முன் நடிக்க இருந்த ஹீரோ பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
15
'அயன்' படத்தில் சூர்யாவுக்கு முன் நடிக்க இருந்த ஹீரோ இவரா? மிஸ் பண்ணிட்டு ஃபீல் பண்ணிய நடிகர்!

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, 'நேருக்கு நேர்' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். இந்த படத்தை வசந்த் இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்து, என  பல படங்களில் நடித்தாலும் சூர்யாவால் நிலையான ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க முடியாமல் போனது.
 

25
ந்தா திரைப்படம் தான் இவருடைய தனித்துவமான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது:

இதன் பின்னர் தளபதி விஜய் உடன் இணைந்து ஃபிரண்ட்ஸ் படத்தில் நடித்தார். சூர்யாவுக்கு இந்த படம் வெற்றியை கொடுத்தாலும், நந்தா திரைப்படம் தான் இவருடைய தனித்துவமான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது. அதே போல் இதற்கு முன்பு சூர்யாவை பார்த்த பார்வையை, நந்தா திரைப்படம் முற்றிலும் மாற்றியதோடு, சூர்யாவால் இப்படியும் நடிக்க முடியும் என நிரூபிக்கும் விதமாக அமைந்தது.

Jyothika: பாலிவுட் போனதும் இப்படியா? படு மோசமான காட்சியில் நடித்த ஜோதிகா - எகிறும் கண்டனம்!

35
சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படம்

இந்த படத்தை தொடர்ந்து காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, என தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்து இவர் நடித்து வந்த நிலையில், இந்த லிஸ்டில் அயன் திரைப்படமும் இணைந்தது. 'அயன்' படத்தை மறைந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் இயக்கியிருந்தார். ரூ. 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 80 கோடி வசூலை அள்ளிய இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
 

45
சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா

சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா இந்த படத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ஜெகன், கருணாஸ், பொன்வண்ணன், ரேணுகா, டெல்லி கணேஷ், உள்ளிட்டா பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தில், நடிகர் சூர்யாவுக்கு முன்பு நடிக்க இருந்த ஹீரோ பற்றிய தகவல்தான் தற்போது வெளியாகி உள்ளது. இயக்குனர் கே வி ஆனந்த் இந்த திரைப்படத்தின் கதையை முதலில் நடிகர் ஜீவாவிடம் தான் கூறியிருந்தாராம். ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் இவரால் நடிக்க முடியாமல் போக, அதன் பின்னரே சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

100 நாளில் சிக்ஸ் பேக்ஸ் வைத்தது எப்படி? நடிகர் சூர்யா கொடுத்த டிப்ஸ்

55
அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ

இந்த தகவலை சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் ஜீவா கூறியுள்ளார். இதன் பின்னர் கோ படத்தை இயக்கி அதில் ஜீவாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories