சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு மிகவும் பிடித்த 3 படங்கள் என்னென்ன என்பதைப்பற்றி கூறி இருக்கின்றார். அதில் கமல் படத்தை 40 முறை பார்த்ததாக கூறி இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தன்னுடைய பேவரைட் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் ரொம்ப பிடிக்குமாம், அதை மட்டும் 40 முறை பார்த்திருப்பாராம்.
25
Rajinikanth
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சினிமாவுக்கு வர துடிக்கும் பலருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். சாதாரண பஸ் கண்டெக்டராக இருந்து தன்னுடைய ஸ்டைலாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்து, தற்போது 74 வயதிலும் கோலிவுட்டின் முடிசூட மன்னனாக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது படங்களுக்கு இன்றளவும் மக்கள் மத்தியில் மவுசு இருக்கிறது. அதனால் இந்த வயதிலும் செம பிசியாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவர் கைவசம் தற்போது இரண்டு பிரம்மாண்ட படங்கள் உள்ளன.
35
Rajinikanth coolie
அதில் ஒன்று கூலி, இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதுதவிர நடிகை பூஜா ஹெக்டேவும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கூலி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
கூலி படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்க உள்ள ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளாராம் ரஜினிகாந்த். கூலி படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளது. அதேபோல் இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார். இந்த இரண்டும் படங்களுமே தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மிகவும் பிடித்த டாப் 3 படங்களைப் பற்றி அவரே மனம் திறந்து பேசி இருக்கிறார்.
55
Rajinikanth Favourite Movies
அதன்படி ரஜினிகாந்த் அடிக்கடி விரும்பி பார்க்கும் படங்கள் என்றால் அது காட்ஃபாதர், திருவிளையாடல் மற்றும் ஹேராம் தானாம். இதில் காட்ஃபாதர் ஹாலிவுட் படம், திருவிளையாடல் சிவாஜி கணேசன் நடித்த படம், ஹேராம் கமல்ஹாசன் இயக்கி நடித்த படம். இந்த மூன்று படங்களில் ஹே ராம் படத்தை மட்டும் நாற்பது முறைக்கு மேல் பார்த்திருப்பாராம் ரஜினி. ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஹே ராம் படம் தனக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என சூப்பர்ஸ்டார் கூறி உள்ளார்.