Published : Mar 02, 2025, 02:22 PM ISTUpdated : Mar 02, 2025, 03:27 PM IST
2025-ல் தமிழ் சினிமாவில் மூன்று திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. அந்த 3 படங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2025-ம் ஆண்டு தொடங்கி 2 மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், தமிழ் சினிமாவில் மத கஜ ராஜா, குடும்பஸ்தன் மற்றும் டிராகன் ஆகிய மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கோலிவுட் கொடுத்திருக்கிறது.
25
Pongal Release Movies on 2024
2024ம் ஆண்டைக் காட்டிலும் 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில், 2024-ம் ஆண்டு முதல் இரண்டு மாதத்தில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினிகாந்தின் லால் சலாம், ரவி மோகனின் சைரன் என பெரிய நடிகர்களின் படங்கள் வரிசைகட்டி ரிலீஸ் ஆனாலும், அவற்றில் ஒரு படம் கூட ஹிட்டாகவில்லை. அதைக்காட்டிலும் 2025-ம் ஆண்டு முதல் 2 மாதங்களில் 3 பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது தமிழ் சினிமா.
35
Dragon
அந்த மூன்று படங்கள் வேறெதுவுமில்லை... இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன மத கஜ ராஜா, குடியரசு தினத்தை ஒட்டி ரிலீஸ் ஆன குடும்பஸ்தன் மற்றும் காதலர் தினத்தை ஒட்டி வெளிவந்த டிராகன். இந்த மூன்று படங்களில் அதிக வசூல் ஈட்டிய படம் என்றால் அது பிரதீப் ரங்கநாதனின் டிராகன் தான். இப்படம் ரிலீஸ் ஆகி 9 நாட்களே ஆகும் நிலையில், 100 கோடி வசூலை நெருங்கிவிட்டது. பிரதீப்பின் கெரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் டிராகன் மாறி இருக்கிறது.
அடுத்தபடியாக விஷால் - சுந்தர் சி கூட்டணியில் பொங்கல் விருந்தாக வெளிவந்த மத கஜ ராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது. 12 ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ் ஆனாலும் இந்த வருடத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மத கஜ ராஜா தான் வெற்றி பெற்றது. இறுதியாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் 10 கோடிக்கும் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸீல் 25 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
55
kudumbasthan
இந்த மூன்று படங்களின் வெற்றிக்கு பின்னணியில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால் இந்த மூன்று படங்களுமே காமெடியை பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். அதனால் தான் மக்கள் இப்படங்களை கொண்டாடி இருக்கிறார்கள். இதுதவிர வெட்டு குத்து, அடிதடி, ஜாதி ஆகியவற்றை புகுத்தி எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வி இருக்கின்றன. இந்த காமெடி டிரெண்டை பாலோ செய்தால் தமிழ் சினிமாவுக்கு 2025-ம் ஆண்டு பிரகாசமானதாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.