24 மணி நேரத்தில் 32 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்த குட் பேட் அக்லீ – துணிவு, மாஸ்டர் டீசர் முறியடிப்பு!

Published : Mar 02, 2025, 01:17 PM IST

Good Bad Ugly Teaser 32 Million Views on You Tube in Tamil : அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது என்று அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

PREV
14
24 மணி நேரத்தில் 32 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்த குட் பேட் அக்லீ – துணிவு, மாஸ்டர் டீசர் முறியடிப்பு!

Good Bad Ugly Teaser 32 Million Views on You Tube in Tamil : சினிமா பின்னணியே இல்லாமல் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சியின் மூலமாக சினிமாவில் கால் பதித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் அஜித். சினிமாவையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேஸ்களில் காதல் கொண்ட அஜித் இப்போது கார் ரேஸ்களில் பங்கேற்று வருவதால் 9 மாதங்களுக்கு சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார். கடந்த மாதம் திரைக்கு வந்த விடாமுயற்சி பெரியளவில் ரீச் கொடுக்காத போதிலும் அதற்கு பல மடங்கு அதிகமாகவே குட் பேட் அக்லீ படத்தின் டீசர் கொடுத்திருக்கிறது.

24
Good Bad Ugly Release From April 10

நேற்று முன் தினம் குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் அஜித் பல விதமான கெட்டப்புகளில் தோன்றுகிறார். அதுமட்டுமின்றி வேதாளம், ரெட், தீனா, மங்காத்த படங்களில் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஒரு சாதாரண அஜித் ரசிகர்கள் அஜித்தை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்பட்டார்களோ அதே போன்று காட்டியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இதற்கு ஒரு காரணமும் உண்டு. அவரும் ஒரு அஜித் ரசிகர் தான். அஜித் ரசிகரால் மட்டுமே அஜித்தை இந்த அளவிற்கு ரசித்து ரசித்து காட்ட முடியும்.

34
Good Bad Ugly Teaser

முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் டீசரில் புதிய சாதனையை படைத்துள்ளது. குட் பேட் அக்லீ டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் யூடியூப்பில் 32 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. அதோடு துணிவு மற்றும் மாஸ்டர் படங்களின் டீசர் சாதனையை முறியடித்துள்ளது. மேலும், இந்தப் படத்தில் வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடலின் ரீமேக் பாடல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் அஜித்தின் டீசர் வெளியாகி ஹிட் கொடுத்த நிலையில் மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 2 பவுனில் தங்க மோதிரம் பரிசாக அளித்துள்ளனர்.

44
Good Bad Ugly Teaser 32 Million Views on You Tube in Tamil

குட் பேட் அக்லீ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் இந்தப் படமும் ஒன்றாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.270 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.500 கோடிக்கு மிகாமல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories