116-க்கும் மேற்பட்ட நாய்களை பராமரிக்க 45 கோடி செலவு செய்த ஸ்டார் ஹீரோ யார் தெரியுமா?

Published : Mar 02, 2025, 03:24 PM IST

வீட்டில் செல்லப் பிராணிகளை அன்பாக கவனிப்பவர்களைப் பார்த்திருப்பீர்கள், பிறந்தநாள் கொண்டாடுபவர்களையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் செல்ல நாய்களுக்கு சொத்து எழுதி வைத்திருப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படிப்பட்ட ஒரு பிரபலத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.  

PREV
18
116-க்கும் மேற்பட்ட நாய்களை பராமரிக்க 45 கோடி செலவு செய்த ஸ்டார் ஹீரோ யார் தெரியுமா?

பாலிவுட் திரையுலகில் செல்லப்பிராணிகளை நேசிக்கும் பல பிரபலங்கள் உள்ளனர். சொல்ல போனால், சொந்த குழந்தைகளை விட செல்லப் பிராணிகளை அன்பாக கவனித்து கொள்வார்கள். நாய்களை செல்லப்பிராணிகளாக அவர்கள் வளர்ப்பதன் மூலம் அவர்களுக்கு மனஅழுத்தம் குறைவதாக கூறுகிறார்கள்.
 

28
நாய்களை வளர்ப்பது ஒரு ஃபேஷனாவும் மாறிவிட்டது:

நாய்களை வளர்ப்பது ஒரு ஃபேஷனாவும் மாறிவிட்டது. பிரபலங்களின் குழந்தைகள் போல் வளர்க்க படும் நாய்களுக்கு தினம்தோறும் ராஜபோக உபசரிப்புகளும் நடக்கிறது. சரி இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், ஒரு பாலிவுட் பிரபலம் தான் வளர்த்த, 116 நாய்களை வளர்த்து அவற்றிக்கு 45 கோடி மதிப்புள்ள சொத்துக்களையே எழுதி வைத்துள்ளார்.
 

38
நாய்களுக்கு என ஒரு மினி பண்ணை வீட்டை கட்டியுள்ளார்.

தான் வளர்க்கும் நாய்களுக்கு என ஒரு மினி பண்ணை வீட்டை கட்டியுள்ளார். தன்னுடைய சொத்தில் பல கொடிகளை நிறைய நாய்களுக்காகவே செலவு செய்து வருகிறார். இவ்வளவு பெரிய டாக் லவ்வர் வேறு யாருமல்ல, பாலிவுட் சூப்பர் ஸ்டார் மிதுன் சக்ரவர்த்தி தான். 80களில் ஃபிலிம் இண்டஸ்ட்ரியையே அதிர வைத்த இந்த ஹீரோ, இப்போது அரசியலில் பிஸியாக இருக்கிறார்.
 

48
பெரிய டாக் லவ்வர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று

மிதுன் சக்ரவர்த்தி பாலிவுட்டில் மிகப்பெரிய ஸ்டார் என்பது பலருக்கு தெரியும். ஆனால் அவர் இவ்வளவு பெரிய டாக் லவ்வர் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. மும்பை மட்டும் இன்றி இந்தியாவில் தனக்கு இருக்கும் வீடுகள், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நாய்களை வளர்த்து வருகிறார் மிதுன் சக்ரவர்த்தி. 

இவர் வளர்த்து வரும் நாய்களின் எண்ணிக்கை மட்டும் 116-ஐ விட அதிகம் என கூறப்படுகிறது. சமீபத்திய தகவலின்படி, இவருக்கு மட் ஐலேண்டில் தனது 1.5 ஏக்கர் நிலத்தில் 76 நாய்கள் உள்ளன. 

58
நாய்களுக்காக இவர் ஒதுக்கப்பட்டிருக்கும் சொத்தின் மதிப்பு சுமார் 45 கோடி

Housing.com-ன் தகவல் படி அந்த நாய்களுக்காக இவர் ஒதுக்கப்பட்டிருக்கும் சொத்தின் மதிப்பு சுமார் 45 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் அவருடைய பெர்சனல் ரெசிடென்ஸ் கூட இருக்கிறது. ஆனால் இங்கே ட்விஸ்ட் என்னவென்றால் மிதுன் சக்ரவர்த்தி தன்னுடைய வீட்டு இடத்தில் அதிக பகுதியை நாய்களுக்காகவே ஒதுக்கி இருக்கிறார். மிதுன் தான் வளர்த்து வரும் நாய்களுடன் தன்னுடைய பிரண்ட்ஸ் நாய்களுக்கும் அவரே செலவு செய்கிறாராம். அவைகளுக்காக ஸ்பெஷல் டன்னல், விளையாடுவதற்கு பிளேகிரவுண்ட் எல்லாவற்றையும் செய்து வைத்திருக்கிறார் மிதுன்.
 

68
சக்ரவர்த்தி நாய்கள் வளர்ப்பு பற்றி அவருடைய மருமகள்:

மேலும் மிதுன் சக்ரவர்த்தி நாய்கள் வளர்ப்பு பற்றி அவருடைய மருமகள் நடிகை மடாலசா சர்மா ஒரு இன்டர்வியூவில் சொல்லி இருக்கிறார். நாய்களுக்காக தன்னுடைய மாமா என்ன செய்திருக்கிறார் என்ற விஷயத்தைப் பற்றி அவர் சொல்லி இருக்கிறார். மிதுன் வீட்டில் நாய்களுக்காக ஸ்பெஷல் ரூம் இருக்கிறதாம். அவைகளின் பாதுகாப்புக்காக ஊழியர்களை ஸ்பெஷலாக நியமித்திருக்கிறார்களாம். நாய்களை சின்னக் குழந்தைகளைப் போலவே பார்க்க வேண்டும். அவைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு சரியான நேரத்திற்கு சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று மிதுன் சக்ரவர்த்தி எப்போதும் சொல்வாராம்.
 

78
மிதுன் சக்ரவர்த்தி ஒரு காலத்தில் பாலிவுட்டில் ஸ்டார் ஹீரோவாக மின்னியவர்:

மிதுன் சக்ரவர்த்தி ஒரு காலத்தில் பாலிவுட்டில் ஸ்டார் ஹீரோவாக மின்னியவர். ரொம்ப வறுமையில் வளர்ந்த அவர், கேரியர் ஸ்டார்டிங்கில் கூட அந்த வறுமையை அனுபவித்திருக்கிறார். சினிமா சான்ஸுக்காக காத்திருந்த மிதுன் சக்ரவர்த்தி ரயில்வே ஸ்டேஷன், ஃபுட்பாத் மேலே படுத்திருந்த நாட்களும் இருக்கிறதாம். அப்படி கஷ்டப்பட்டு ஸ்டார் ஹீரோவாக மாறி இந்த அளவிற்கு வந்திருக்கிறார்.

ஹிந்தி மட்டும் இன்றி மிதுன் சக்ரவர்த்தி தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். மிதுன் சக்ரவர்த்தியின் சொத்து சுமார் 400 கோடி இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஊட்டியிலிருக்கும் மட் ஐலேண்டில் மிதுனுக்கு வீடு கூட இருக்கிறது. நிறைய ஹோட்டல், காட்டேஜுகளை நிர்வகித்து வருகிறார்.  மும்பைக்கு அருகில் ஃபார்ம் ஹவுஸ் ஒன்றும் இவருக்கு உள்ளது. மிதுன் சக்ரவர்த்திக்கு மைசூரிலும் பெரிய அளவில் சொத்து இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

88
பாஜக கட்சியில் பணியாற்றி வருகிறார்:

இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட இவர், நடிகை ஸ்ரீதேவியை, திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்து செய்ததாகவும் ஒரு வதந்தி பாலிவுட் திரையுலகில் உண்டு. மிதுன் யாரோ ஒருவர் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு சென்ற ஒரு குழந்தையை தன்னுடைய மகளைப் போலவே வளர்த்து பெரியவளாக்கி இருக்கிறார். பெர்சனலாக சாந்தமான சுபாவம் உள்ளவர் என்று அவருக்கு பெயர் இருக்கிறது. தற்போது அரசியலில் இருக்கும் அவர் பாஜக கட்சியில் தொடர்ந்து பயணித்து வருகிறார். 
 

Read more Photos on
click me!

Recommended Stories