2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் சமந்தா; குஷி மோடில் ஃபேன்ஸ்!

Published : Mar 02, 2025, 07:10 PM ISTUpdated : Mar 02, 2025, 07:13 PM IST

நீண்ட நாட்களாக சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா இப்போது மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதை உறுதி செய்துள்ளார்.  

PREV
14
2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கும் சமந்தா; குஷி மோடில் ஃபேன்ஸ்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கடைசியாக சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய படங்களில் நடித்திருந்தார். குஷி படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு சமந்தா திரையுலகில் இருந்து விலகி 2 வருடம்  பிரேக் எடுத்து கொண்டு ஓய்வு எடுக்க போவதாக அறிவித்தார். மயோசிட்டிஸ் காரணமாக ஒருபுறம் இவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்பட்டது.

பின்னர்  பாலிவுட் பக்கம் சென்ற சமந்தா, மும்பையிலேயே தங்கி, 'சிட்டாடல்' வெப் சீரிஸில் நடித்தார். இந்த சீரிஸ் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.  இந்த சீரிஸிற்காக ரூ.10 கோடி வரையில் சம்பளம் பெற்றதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு மற்றொரு வெப் சீரிஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

 

24
தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்கிறார் சமந்தா

இந்நிலையில் எப்போது சமந்தா திரைப்படங்களில் ரீ எண்ட்ரி கொடுப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இப்போது தெலுங்கு சினிமாவில் உருவாகி வரும் Maa Inti Bangaram என்ற படத்தின் மூலமாக ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் மூலமாக அவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்கிறார். சமந்தா தனது சொந்த பேனரில் மா இன்டி பங்கம் (Maa Inti Bangaram) என்ற படத்தை தயாரிக்கிறார்.

சமந்தா 110 கிலோ எடை தூக்கி ரசிகர்களுக்கு ஷாக்; ஜிம்மில் தெறிக்க விடும் சமந்தா ரூத் பிரபு!

34
தெலுங்கு மற்றும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்க ஸ்கிரிப்ட்களை கேட்டு வருகிறாராம்:

அதே போல் தெலுங்கு மற்றும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுக்க ஸ்கிரிப்ட்களை கேட்டு வருகிறாராம். நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் உடனே நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நல்ல லவ் ஸ்டோரி கிடைத்தாலும் ஓகே என்கிறாராம். அப்படி ஒரு கதைக்காகத்தான் காத்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை நிறைய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த சமந்தா, ஹீரோயினை மையப்படுத்திய ரோல்களிலும் நடித்துள்ளார். 
 

44
லவ் ஸ்டோரி கதைகளை செலக்ட் செய்கிறாராம்

இதனால் ரீஎன்ட்ரிக்கு அப்படிப்பட்ட லவ் ஸ்டோரி கதைகளை செலக்ட் செய்கிறாராம். படங்களில் நடிக்கவில்லையென்றாலும் கூட சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார் சமந்தா. சோஷியல் மீடியா மூலம் எப்போது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். திரும்பி வா ப்ரோ என்று ஒரு ஃபேன் கமெண்ட் செய்தால், வருகிறேன் ப்ரோ என்று இன்ஸ்டாகிராம் மூலம் கமெண்ட் செய்திருக்கிறார் சமந்தா. அப்படி ரசிகர்களுடன் அட்டாச்மெண்ட்டுடன் இருக்கும் சமந்தாவிற்கு ஆதரவு கொடுக்க ஃபேன்ஸ் எப்போதும் ரெடியாக இருக்கிறார்களாம். இந்த தகவல் அவருடைய ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

Samantha: தெலுங்கு இயக்குநரை மறுமணம் செய்துகொள்கிறாரா நடிகை சமந்தா?

click me!

Recommended Stories