விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடித்து ஹிட்டானதைவிட பிளாப் ஆன படங்கள் தான் அதிகமா! அப்போ கோட் நிலைமை?

First Published | Sep 4, 2024, 4:05 PM IST

Vijay Dual Role Movies : கோட் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் தளபதி விஜய், அதற்கு முன்னர் அவ்வாறு எந்தெந்த படங்களில் நடித்துள்ளார் என்பதை பார்க்கலாம்.

Thalapathy Vijay Dual Role Movies

நடிகர் விஜய்யின் சினிமா பயணம் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டும் தான் நடிக்க உள்ளார். அதன்பின்னர் முழுநேர அரசியலில் இறங்க உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். அதனால் அவரின் கடைசிகட்ட சினிமா படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கோட். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார்.

விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் கோட் படத்தையும் தயாரித்துள்ளது. விஜய்யின் பிகில் படம் உலகளவில் 300 கோடி வசூலித்தது. ஆனால் அதைவிட 100 கோடி கூடுதலாக செலவளித்து கோட் படத்தை எடுத்துள்ளனர். இப்படத்திற்காக நடிகர் விஜய்யின் சம்பளம் மட்டுமே ரூ.200 கோடி. கோட் திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் புரமோஷனும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள்

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்தை டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்து உருவாக்கி இருக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு பின் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் கோட் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது. கோட் படத்துக்கு முன் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் பற்றி பார்க்கலாம்.

Vijay Double Action Movies

அழகிய தமிழ்மகன்

நடிகர் விஜய் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் அழகிய தமிழ்மகன். இப்படத்தை பரதன் இயக்கி இருந்தார். கடந்த 2007-ம் ஆண்டு தீபாவளி விருந்தாக இப்படம் திரைக்கு வந்தது. இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா மற்றும் நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ஒரு விஜய் ஹீரோவாகவும் மற்றொரு விஜய் வில்லனாகவும் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். ஆனாலும் இப்படம் பிளாப் ஆனது.

வில்லு

பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி திரைப்படம் மாஸ் ஹிட் ஆனதால் அவர்கள் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீண்டும் இணைந்த படம் வில்லு. இப்படத்தில் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக பிரகாஷ் ராஜும் நடித்திருந்தனர். கடந்த 2009-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படியுங்கள்... தலையில் தூக்கிவைத்து கொண்டாடப்பட்ட தளபதியின் டாப் 10 ஹிட் மூவீஸ் & கழுவி ஊற்றப்பட்ட டாப் 10 பிளாப் படங்கள் இதோ

Tap to resize

Kaththi

கத்தி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் கத்தி. இப்படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் விஜய். தண்ணீர் இல்லாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் பற்றியும், திருட்டுத்தனமாக தண்ணீரை உறிஞ்செடுக்கும் கார்பரேட் கம்பெனிகள் பற்றியும் தோலுரித்துக் காட்டியது இப்படம். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். தீபாவளி விருந்தாக வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.

Mersal

மெர்சல்

நடிகர் விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்த படம் தான் மெர்சல். இப்படத்தை அட்லீ இயக்கி இருந்தார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் ஜிஎஸ்டி-யை விமர்சிக்கும் விதமாக விஜய் பேசிய வசனங்கள் ரிலீசுக்கும் முன்பே சலசலப்பை ஏற்படுத்தின. அரசியல் கட்சிகளும் இப்படத்திற்கு எதிராக குரல் கொடுத்ததால் அதுவே ஒரு பப்ளிசிட்டியாக மாறி படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்தது.

Bigil

பிகில்

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆன படம் பிகில். இப்படத்தையும் அட்லீ தான் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய் பிகில், ராயப்பன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதிலும் தந்தையாக வரும் ராயப்பன் கேரக்டர் படத்தில் கொஞ்ச நேரம் மட்டுமே வந்தாலும் அதற்கு வேறலெவல் வரவேற்பு கிடைத்தது. பிகில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது.

கோட்

சுமார் 5 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். நாளை 5000 திரைகளில் கோட் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்திலும் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதுவரை விஜய் இரட்டை வேடத்தில் நடித்த பெரும்பாலான படங்கள் பிளாப் ஆன நிலையில், கோட் ரிசல்ட் என்ன ஆகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... பட்ஜெட் 45 கோடி; ஆனா வசூல் 1 லட்சம் தான்! தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட இந்த படம் பற்றி தெரியுமா?

Latest Videos

click me!