Top 10 Hit Movies of Thalapathy Vijay
தமிழ் திரையுலகின் தளபதியாக வலம் வரும் விஜய், இன்று கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் நாளை உலகமெங்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் அவரின் ஹிட் மற்றும் பிளாப் படங்கள் பற்றி பார்க்கலாம்.
விஜய்யின் டாப் 10 ஹிட் படங்கள்
நடிகர் விஜய்க்கு சினிமாவில் ஆரம்ப காலகட்டம் மிகவும் கடினமாகவே இருந்தது. தந்தையின் தயவோடு சினிமாவில் அவர் ஈஸியாக நுழைந்தாலும் அவருக்கு வெற்றி என்பதி எட்டாக் கனியாகவே இருந்தது. அப்படி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய்க்கு முதல் வெற்றியை கொடுத்த படம் என்றால் அது பூவே உனக்காக படம் தான். விக்ரமன் இயக்கிய இப்படம் தான் விஜய்யை பேமிலி ஆடியன்ஸுக்கு பிடித்த ஹீரோவாக மாற்றியது.
பூவே உனக்காக படத்தை தொடர்ந்து விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த மற்றொரு திரைப்படம் காதலுக்கு மரியாதை. இப்படத்தை மலையாள நடிகர் பகத் பாசிலின் தந்தை பாசில் இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் தான் நடிகை ஷாலினி ஹீரோயினாக அறிமுகமானார். மலையாள படத்தின் ரீமேக் ஆன இப்படம் தமிழிலும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
Ghilli
நடிகர் விஜய்க்கு அதிரி புதிரியான வெற்றியை கொடுத்த படங்களில் குஷி படத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் எடுக்கப்பட்டது. மூன்று மொழிகளிலுமே வேறலெவல் ஹிட் ஆனது. இப்படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு ஜோடியாக முதன்முதலில் நடித்தார் நடிகை ஜோதிகா.
விஜய்யை மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்திய படமென்றால் அது கில்லி தான். தரணி இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீஸான இப்படம் தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி கலெக்ஷன் அள்ளிய படம் என்கிற இமாலய சாதனையை படைத்தது. விஜய்யின் மாஸ் ஹீரோ இமேஜை மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்ற படம் போக்கிரி. பிரபுதேவா இயக்கிய இப்படம் தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த கமர்ஷியல் படங்களில ஒன்றாகும்.
இதையும் படியுங்கள்... என்ன இப்படி எழுதி வச்சிருக்காங்க! சென்சார் செய்யப்பட்ட வில்லங்கமான தமிழ் பாடல் வரிகள் இதோ
Pokkiri
நடிகர் விஜய் சி செண்டர் ஆடியன்ஸையும் கவரும் விதமாக நடித்த படம் தான் திருப்பாச்சி. இப்படத்தில் அவரின் தங்கச்சி செண்டிமெண்ட் தொடங்கி ஆக்ஷன் அதிரடி வரை அனைத்தும் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருந்ததால் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. விஜய்யின் கெரியரில் மறக்கமுடியாத படங்களில் துப்பாக்கியும் ஒன்று. அவரின் முதல் 100 கோடி வசூல் அள்ளிய படமும் இதுதான்.
விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தை உச்சத்துக்கு கொண்டு சென்ற இயக்குனர்களில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் அட்லீக்கு தனி இடம் உண்டு. அட்லீ இயக்கிய தெறி படத்தில் போலீஸ் வேடத்தில் மெர்சல் காட்டி இருப்பார் விஜய். இப்படத்தை போல் விஜய்க்கு இமாலய வெற்றியை கொடுத்த மற்றொரு படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் வேறலெவல் ஹிட் அடித்தது.
கொரோனா காலத்தில் துவண்டு கிடந்த திரையரங்குகளுக்கு புத்துணர்ச்சி கொடுத்தது விஜய்யின் மாஸ்டர் படம் தான். அப்படத்தின் வெற்றியால் லாபம் அடைந்த தியேட்டர் உரிமையாளர்கள் ஏராளம். அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படமும் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. விஜய்யின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய படம் என்றால் அது லியோ தான்.
Top 10 Flop Movies of Thalapathy Vijay
விஜய்யின் பிளாப் படங்கள்
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவிய படம் உதயா. 2004ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை அழகம் பெருமாள் இயக்கி இருந்தார். அதேபோல் 2003-ம் ஆண்டு ஜெகன் இயக்கத்தில் விஜய் நடித்த புதிய கீதை திரைப்படமும் படுதோல்வியை சந்தித்தது.
கில்லி, திருப்பாச்சி, போக்கிரி என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த விஜய் அடுத்ததாக நடித்த ஆதி படம் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்தை ரமணா இயக்கி இருந்தார். இதையடுத்து பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த அழகிய தமிழ்மகன் படமும் 2007-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி தோல்வியை தழுவியது.
Bairavaa
விஜய் அதிக பஞ்ச் டயலாக்குகள் பேசி நடித்த படம் வேட்டைக்காரன். இப்பட பாடல்கள் ஹிட்டானாலும் படம் பிளாப் ஆனது. அதேபோல் விஜய்யின் கெரியரில் படு மொக்கையான படம் என்றால் அது சுறா தான். இப்படத்தை எஸ்.பி ராஜ்குமார் இயக்கி இருந்தார். இப்படத்திலும் பாடல்கள் ஹிட்டாகின.
விஜய்யின் கெரியரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு பிளாப் ஆன படம் தலைவா. இப்படம் அரசியல் தலையீடு காரணமாக தோல்வியை தழுவியது. அதேபோல் குழந்தைகளை கவர விஜய் நடித்த சரித்திர கதையம்சம் கொண்ட படமான புலியும் படுதோல்வி அடைந்தது.
நடிகர் விஜய் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக நடித்த படம் தான் பைரவா. பரதன் இயக்கிய இப்படம் பிளாப் ஆனது. அதேபோல் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படமும் படுதோல்வியை சந்தித்தது. இப்படத்திற்கு போட்ட காசை தயாரிப்பாளர் எடுத்தாலும், விநியோகஸ்தர்களுக்கு இப்படம் நஷ்டத்தை கொடுத்தது.
இதையும் படியுங்கள்... சுச்சி லீக்ஸால் கோலிவுட்டையே கதிகலங்க வைத்தவர்; யார் இந்த சுசித்ரா? அந்தரங்க விஷயங்களை அவிழ்த்துவிட்டது ஏன்?