தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்... கோலிவுட்டில் இத்தனை சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளாரா?

Published : Sep 04, 2024, 11:39 AM IST

Producer Mohan Natarajan Passed away : தமிழில் பல வெற்றிப்படங்களை தயாரித்தவரும், வில்லன் நடிகருமான நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் சினிமா பயணம் பற்றி பார்க்கலாம்.

PREV
14
தயாரிப்பாளர் மோகன் நடராஜன் காலமானார்... கோலிவுட்டில் இத்தனை சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளாரா?
Mohan Natarajan

தமிழ் சினிமாவில் வில்லனாகவும் தயாரிப்பாளராகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் மோகன் நடராஜன். ஸ்ரீ ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கும் இவர் கடந்த 1986-ல் மோகன், நதியா நடிப்பில் வெளிவந்த பூக்களைப் பறிக்காதீர்கள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்னர் பிரபு நடித்த என் தங்கச்சி படிச்சவ படத்தை தயாரித்தார் மோகன் நடராஜன்.

24
Producer Mohan Natarajan

இவர் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த வேலை கிடைச்சிடுச்சு, அருண்பாண்டியனின் கோட்டை வாசல் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதுமட்டுமின்றி தற்போது டாப் ஹீரோக்களாக வலம் வரும் விஜய், சூர்யாவை வைத்தும் படம் தயாரித்துள்ளார் மோகன் நடராஜன். விஜய், ஷாலினி நடிப்பில் வெளியாகி ஹிட்டான கண்ணுக்குள் நிலவு திரைப்படம் மோகன் நடராஜன் தயாரித்தது தான்.

இதையும் படியுங்கள்... என்ன இப்படி எழுதி வச்சிருக்காங்க! சென்சார் செய்யப்பட்ட வில்லங்கமான தமிழ் பாடல் வரிகள் இதோ

34
Mohan Natarajan Passed Away

அதேபோல் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வேல் திரைப்படமும் இவர் தயாரிப்பில் வெளிவந்தது தான். இதுமட்டுமின்றி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்த தெவத்திருமகள் திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருந்தார் மோகன் நடராஜன். இதுதான் அவர் தயாரித்த கடைசி படமும்கூட. அதன்பின்னர் உடல்நிலை சரியில்லாததால் சினிமாவை விட்டு விலகினார்.

44
Mohan Natarajan Death

இதுதவிர வில்லனாகவும் தயாரிப்பாளர் மோகன் நடராஜன் நடித்த சக்கரைத்தேவன், நம்ம அண்ணாச்சி, கோட்டைவாசல், பிள்ளைக்காக, புதல்வன், அரண்மனை காவலன், பாட்டுப்பாடவா, பட்டியல், மகாநதி, போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மோகன் நடராஜன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள்... முன்பதிவிலேயே ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய கோட்!!

click me!

Recommended Stories