முன்பதிவிலேயே ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய கோட்!!

Published : Sep 04, 2024, 08:06 AM ISTUpdated : Sep 04, 2024, 11:59 AM IST

GOAT movie beats Lal Salaam Lifetime Collection : விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் தமிழகமெங்கும் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், முன்பதிவிலேயே அப்படம் செய்துள்ள வசூல் சாதனை குறித்து பார்க்கலாம்.

PREV
15
முன்பதிவிலேயே ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை சல்லி சல்லியாக நொறுக்கிய கோட்!!
Thalapathy GOAT

தளபதி விஜய்யின் 68-வது திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்திற்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும், விஜய்யின் மற்றொரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக சினேகாவும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

25
GOAT movie Vijay

கோட் திரைப்படம் உலகமெங்கும் 5000 திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் 1100 திரைகளில் திரையிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலும் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதால், அங்கு இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள கோகுலம் நிறுவனம் முதல் நாளில் மட்டும் கோட் திரைப்படம் கேரளாவில் 700 திரைகளில் சுமார் 4 ஆயிரம் ஷோ திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்... தளபதியின் த.வெ.க மாநாடு.. வருகை தருகிறார் ராகுல் காந்தி? கொளுத்திப்போடும் நெட்டிசன்ஸ்!

35
The Greatest of All Time

இதன்மூலம் கேரளாவில் அதிக திரைகளில் திரையிடப்படும் வேற்று மாநிலப்படம் என்கிற சாதனையை கோட் படைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் கோட் படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்நாடு தவிர மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் அதிகாலை 4 மணிக்காட்சி திரையிடப்படுவதால் அங்கு முதல் காட்சியை காண தமிழ் நாட்டில் இருந்து ஏராளமான ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

45
GOAT advance sales report

கோட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில், தற்போது முன்பதிவின் மூலம் கோட் திரைப்படம் எவ்வளவு வசூலித்து உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் கோட் திரைப்படம் முன்பதிவின் மூலம் ரூ.16 கோடி வசூலித்து உள்ளதாம். அதே போல் அமெரிக்காவில் ரூ.5.5 கோடி வசூலித்துள்ள இப்படம், கேரளாவில் ரூ.1.3 கோடியும், கர்நாடகாவில் ரூ.3.4 கோடியும் வசூலித்து இருக்கிறது.

55
GOAT movie beats lal salaam lifetime collection

இதன்மூலம் முன்பதிவிலேயே ரூ.30 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது கோட் திரைப்படம். இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே உலகளவில் ரூ.30 கோடி தான் வசூலித்து இருந்தது. ஆனால் கோட் திரைப்படம் முன்பதிவிலேயே அந்த வசூலை வாரிக்குவித்து ரஜினி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து உள்ளது. 

இதையும் படியுங்கள்... சுடிதார் அணிந்து வந்த சொர்கமே.. மஞ்சளில் அசத்தும் நிவேதா தாமஸ் - கூல் கிளிக்க்ஸ்!

Read more Photos on
click me!

Recommended Stories