Hema Committee Report
கேரள திரைத்துறை
கடந்த சில நாள்களாகவே ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் கேரளா திரையுலகின் மீது தான் உள்ளது என்றால் அது மிகையல்ல. காரணம் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது கேரள திரையுலக சேர்ந்த நடிகைகள் பலரும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாகவே இந்த பிரச்சனை இருந்து வருவதாகவும், இந்நிலையில் இந்த விஷயம் கேரள முதல்வர் பினராயி விஜயன் வரை சென்று, இப்போது அவருடைய தலைமையிலான நீதிபதி ஹேமா குழு இந்த விஷயத்தில் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களில் மட்டும், 18க்கும் மேற்பட்ட நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் மலையாள திரை உலக தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது வரை 9க்கும் மேற்பட்ட நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்த தகவல்களை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட துவங்கியுள்ளனர்.
தளபதியின் த.வெ.க மாநாடு.. வருகை தருகிறார் ராகுல் காந்தி? கொளுத்திப்போடும் நெட்டிசன்ஸ்!
Revathy Sampath
மினு முனீர்
சில தினங்களுக்கு முன்பு கேரள திரையுலக நடிகை மினு முனீர் என்பவர் நான்கு முக்கிய மலையாள திரை உலக நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். நடிகர் ஜெயசூர்யா, நடிகர் முகேஷ் மற்றும் இடைவேளை பாபு உள்ளிட்ட நான்கு நடிகர்கள் பல்வேறு தருணங்களில் தனக்கு பாலியல் தொல்லையை கொடுத்துள்ளதாக கூறினார் அவர். குறிப்பாக ஒரு முறை தான் கழிவறை சென்று திரும்பிய பொழுது, வெளியே நின்று கொண்டிருந்த பிரபல நடிகர் ஜெயசூர்யா, பின்னாலிருந்து தன்னை கட்டி பிடித்து தனக்கு முத்தம் கொடுத்ததாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல், கேரள திரைப்பட சங்கத்தில் உறுப்பினராவது குறித்து, பிரபல நடிகர் ஒருவரிடம் பேசிய போது, அந்த விஷயமாக பேச தன்னை வீட்டிற்கு அழைத்து அந்த நடிகர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் மினு முனீர் புகார் அளித்திருந்தார். அதேபோல இந்த பாலியல் சீண்டல் விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்த கேரள நடிகை ரேவதி சம்பத் பேசும்பொழுது, பிரபல இயக்குனர் ஒருவர் திரைப்பட படப்பிடிப்பின் போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அதை வெளியில் சொன்னால் அவருக்கு பல விபரீதங்கள் ஏற்படும் என்று தன்னை மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.
அது மட்டும்மல்லாமல், பிரபல தமிழ் திரையுலக நடிகர் ரியாஸ் கான் ஒரு முறை தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ரேவதி சம்பத் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டார்.
Actress Radhika sarathkumar
ராதிகா சரத்குமார்
இந்நிலையில் கேரள திரையுலகை போல தமிழ் திரை உலகில் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதாக பிரபல நடிகை ராதிகா சரத்குமார் குற்றம் சாட்டினார். இந்த கேரள பிரச்சனை குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கேட்ட பொழுது "தனக்கு எதுவும் தெரியாது" என்று அவர் பதில் சொல்லியதை மேற்கோள்காட்டி, ராதிகாவிடம் கேள்வி கேட்ட பொழுது, "பெரிய நடிகர்கள் மௌனமாக இருப்பது அவர்களை தவறாக சித்தரிக்க வாய்ப்புகளை கொடுத்து விடும்" என்று கூறினார்.
அது மட்டுமல்லாமல் இப்போது பல நடிகர்கள் அரசியலில் களமிறங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அரசியலில் களம் இறங்கி மக்களுக்கு நீங்கள் நல்லது செய்யும் முன், உங்களோடு உழைத்த நடிகைகளுக்காக குரல் கொடுங்கள் அதுதான் மிகவும் முக்கியமானது என்று கூறினார். இதனால் தளபதி விஜயை அவர் சூசகமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது.
nivin pauly
நிவின் பாலி
இந்த சூழலில் தான் இன்று பிரபல கேரளா திரைப்பட நடிகர் நிவின் பாலி மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். நிவின் பாலி உள்பட ஆறு நபர்கள் மீது கொடுக்கப்பட்ட அந்த புகாரில், திரைப்பட வாய்ப்பு தருவதாக கூறி, தனக்கு பாலியல் துன்புறுத்தலை கொடுத்ததாக கூறப்பட்டது. உண்மையில் இந்த விஷயம் இன்று மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.
இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள நடிகர் நிவின் பாலி "அண்மையில் எனது பெயரை பயன்படுத்தி போலியாக ஒரு செய்தி வலம் வருவதை கண்டேன். ஒரு பெண்ணிடம் நான் தவறாக நடந்து கொண்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. இது ஆதாரம் எதுவும் இல்லாத ஒரு போலியான செய்தி என்பதை நான் உங்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். இது ஒரு போலியான தகவல் என்பதை நிரூபிக்க நான் எந்த ஒரு எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். அடிப்படை ஆதாரங்களை இல்லாமல் சொல்லப்படும் இது போன்ற குற்றச்சாட்டுகளை வெளிச்சம் போட்டு காட்டுவேன். இதை நான் சட்ட ரீதியாக விரைவில் சந்திப்பேன் என்று காட்டமான ஒரு பதிவை அவர் வெளியிட்டிருக்கிறார்.
"உடை மாற்ற மட்டுமல்ல கேரவன்" திரைக்கு பின்னால் நடப்பது என்ன? மனம் திறந்த ஷகீலா!