
ஷகீலா
கடந்த 1994ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான "ப்ளே கேர்ள்ஸ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார் நடிகை சகிலா. ஆரம்பம் முதலே கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த ஷகீலா, கடந்த 1997ம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான "ஷோபனம்" என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு மலையாள மொழியில் மட்டும் வருடத்திற்கு 25க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கும் முன்னணி நடிகையாக அவர் மாறினார்.
என்ன தான் வருடத்திற்கு 25 படங்கள் என்றாலும், அவர் நடித்த அந்த திரைப்படங்கள் அனைத்துமே கவர்ச்சியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மலையாள மொழியில் முன்னணி கவர்ச்சி நாயகியாக மாறிய அவர், அதன் பிறகு தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் சொற்ப திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அதுவும் கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட கதாபாத்திரங்கள் மட்டுமே.
இந்திய திரை உலகை பொறுத்தவரை கடந்த 33 ஆண்டுகளாக பயணித்து வரும் ஷகீலா, கடந்த சில வருடங்களாகவே குணச்சித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க தொடங்கியுள்ளார். அதற்கு முக்கிய காரணம் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிய ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" என்கின்ற நிகழ்ச்சி தான் என்றால் அது மிகையல்ல.
தளபதியின் த.வெ.க மாநாடு.. வருகை தருகிறார் ராகுல் காந்தி? கொளுத்திப்போடும் நெட்டிசன்ஸ்!
மனம் திறக்கும் ஷகீலா
அண்மையில் அவர் பங்கேற்று பேசிய பேட்டி ஒன்றில், பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாகவும், உண்மையாகவும் அவர் பேசியிருக்கிறார். "நான் நடிக்க தொடங்கிய காலத்தில் ஒரு நடிகையாக எங்களால் உடையை கூட சரியான இடத்தில் மாற்றிக்கொள்ள முடியாது. ரிமோட்டான இடங்களுக்கு ஷூட்டிங் செல்லும் பொழுது, மேலே ஒரு பெரிய ஆடையை போட்டுக்கொண்டு, ஏற்கனவே நாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மாற்றும் நிலைகூட எங்களுக்கு ஏற்பட்டுள்ளது".
"எங்களை சுற்றி நூற்றுக்கணக்கான ஆண்கள் அப்போது நின்று கொண்டிருப்பார்கள் என்பது தான் வேதனையின் உச்சம். இப்போது உள்ளது போல அப்போது கேரவன்கள் கலாச்சாரமும் பெரிய அளவில் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் நினைப்பது போல கேரவேனில் உடைமாற்றும் விஷயங்கள் மட்டும் நடப்பதில்லை. உள்ளே சில பேர் ஒன்றாக கூடி உணவு உண்பார்கள், சில நேரங்களில் உடலுறவு கூடகொள்வார்கள்."
"இதை நான் நேரில் பார்த்ததில்லை என்றாலும், பல நேரங்களில் இது குறித்த விஷயங்களை என் காதார கேள்விப்பட்டிருக்கிறேன். ரூபாஸ்ரீ என்ற நடிகை திரைப்பட ஷூட்டிங்கின்போது, ஒரு அறைக்குள் இருந்தார். அப்போது நடிகர் ஒருவர் அவருடைய அரை கதவை தட்டி, அவரை வெளியே அழைத்து, அவருக்கு உதவி ஏதும் தேவைப்படுமோ என்று எண்ணி அதனால் கதவை தட்டியதாக கூறிய சம்பவத்தை நினைவு கூர்ந்த ஷகீலா, தனக்கு அதுபோல எதுவும் நடந்ததில்லை" என்று கூறியுள்ளார்.
அன்னை தெரசா
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்து வந்த நான், ஒரு படத்தில் அன்னை தெரேசாவாக நடித்திருக்கிறேன். அந்த இயக்குனர் என் கண்ணில் காமம் தெரியவில்லை, மாறாக இறக்கம் தான் தெரிகிறது, அதனால் தான் உங்களை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறேன் என்று கூட என்னிடம் கூறியிருக்கிறார். நானும் அந்த படத்தில் ஆனந்தமாக நடித்தேன், ஆனால் 15 வருடங்கள் கடந்துவிட்டது, ஆனால் அந்த படம் வெளியாகவில்லை.
மேலும் அந்த திரைப்படத்தை இறுதிவரை வெளியிட வேண்டாம் என்று தானும் அந்த இயக்குனரிடம் கேட்டுக் கொண்டதாகவும் கூறியிருக்கிறார் ஷகீலா. மேலும் அந்த நேர்காணலின் உச்சகட்ட விஷயமாக, மலையாள திரை உலகில் ஆதிக்கம் உள்ள சிலர் பற்றி கூறியிருக்கிறார். பல ஆண்டுகளாக அவர்கள் தான் அந்த திரை துறையை ஆட்டி வித்து வருவதாகவும் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஹேமா கமிட்டி
"மலையாளத் திரையுலகில் எப்பொழுதும் ஒரு அதிகாரக் குழு இருந்து வருகிறது, அவர்கள் இன்னும் அந்த திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றார்கள். அந்த அதிகார குழுவில் மோகன்லால் மற்றும் மம்மூட்டியை தவிர முகேஷ் மற்றும் பலர் உள்ளனர், ஆனால் அந்த குழுவில் முக்கியவர்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி" என்று ஷகீலா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கேரளா முதல்வர் பினராயி விஜயின் தலைமையில், நீதிபதி ஹேமாவின் கமிட்டி அண்மையில் 223 பக்கம் கொண்ட ஒரு அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை வெளியான நாள் முதல், இப்போது வரை மலையாள திரை உலகில் உள்ள 18 மூத்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது சக நடிகைகள் பாலியல் புகாரை முன் வைத்திருக்கின்றனர்.
குறிப்பாக நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், இடைவேளை பாபு இயக்குனர் துளசிதாஸ் உள்ளிட்ட பலர் மீது இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு தொடங்கி, கடந்த 2017ம் ஆண்டு வரை நடந்த பல்வேறு சம்பவங்களை அந்த நடிகைகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த பாலியல் விவகாரம் கேரள தரைத்துறையில் மிகப்பெரிய பிரளயமாக வெடித்த நிலையில், அம்மாநில நடிகர் சங்க பதவியில் இருந்து அதில் பயணித்த 17 பேரும் அண்மையில் பதவி விலகியது அனைவரும் அறிந்ததே.
வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த நிவின் பாலி! அதிரடி வழக்கு பதிவு!