
மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் அவரது நண்பர் 6 பேர் சேர்ந்து, தனக்கு திரைப்படத்தில் ஏதேனும் கதாபாத்திரம் வாங்கி தருவதாக கூறி வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக இளம் பெண் ஒருவர் கொடுத்த புகாரை தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள திரையுலகை தற்போது கொந்தளிக்கச் செய்துள்ளது ஹேமா கமிட்டியின் அறிக்கை. ஏற்கனவே மூத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், போன்ற பலரின் பெயர் ஹேமா கமிட்டி அறிக்கையில் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், அடுத்தடுத்து பல நடிகைகள், தானாக முன்வந்து சில முன்னணி நடிகர்களால், திரையுலகில் சந்தித்த மோசமான சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக மலையாள சினிமாவில் மிரட்டி படுக்க வைக்கும் கலாச்சாரம் இருப்பதாகவும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் வெளிப்படையாக சில சூப்பர் ஸ்டார் நடிகர்களை கூறி சாடி வருகின்றனர். இதனை உண்மையாகும் விதமாக மலையாள திரையுலகில், அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை உள்ளது பல நடிகைகள் ஓப்பனாக கூறினார். இந்த பிரச்சனை குறித்து பதில் அளிக்க வேண்டிய இடத்தில், இருந்த நடிகர் சங்க தலைவர் மோகன் லால்... திடீர் என தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து இவருக்கு கீழே இருந்த 17 செயலாளர்களும் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்த்தனர். இதனால் எதையும் எதிர்த்து போராட தெரியாத கோழையாக மோகன் லான் உள்ளார் என்று நடிகை பார்வதி முதல் பலர் நேரடியாக விமர்சித்த நிலையில், பத்திரிகையாளர்கள் சிலர் தன்னை பற்றிய விஷயம் வெளியாகலாம் என பயந்து தான் மோகன் லால் பதவியை ராஜினாமா செய்தார் என கூறி வருகிறார்கள்.
ஹனி மூனுக்கு செல்லும் போது மகளையும் அழைத்து சென்ற சித்தி வரலட்சுமி சரத்குமார்! வைரல் போட்டோஸ்!
ஹேமா கமிட்டி அறிக்கை விஷயம் தற்போது, பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில்... இளம் நடிகர் நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 6 பேர் மீது இளம் பெண் ஒருவர், திரைப்பட வாய்ப்பு பெற்று தருவதாக கூறி தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்துள்ளார். பல இளம் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற நிவின் பாலி குறித்து மலையாள திரை உலகில் எழுந்துள்ள இந்த புகார் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த இளம் பெண் கொடுத்த புகாரை தொடர்ந்து, நிவின் பாலி மற்றும் அவருடைய நண்பர் ஆறு பேர் மீது எர்ணாகுளம் உன்னுக்கள் காவல் நிலையத்தில் போலீசார் 6 பேர் மீதும் ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். எனவே கூடிய விரைவில் நிவின் பாலி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது
நடிகர் நிவின் பாலி மலையாள நடிகராக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக இவர் தமிழில் கடந்த 2013 ஆம் ஆண்டு 'நேரம்' என்கிற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை நஸ்ரியா நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து பெங்களூர் டேஸ், பிரேமம் போன்ற படங்கள் மூலமாகவும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகராக மாறினார்.