ஹனி மூனுக்கு செல்லும் போது மகளையும் அழைத்து சென்ற சித்தி வரலட்சுமி சரத்குமார்! வைரல் போட்டோஸ்!

நடிகை வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் கணவரின் நிக்கோலாயின் முதல் மனைவி மகளையும், அழைத்துக் கொண்டு ஹனி மூனுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Varalaxmi sarathkumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும், சரத்குமாரின் மூத்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, இவருக்கு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' மற்றும் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான 'காதல்' போன்ற திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், தன்னுடைய தந்தை படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறியதால் அப்போதைக்கு நடிக்க வந்த ஹிட் பட வாய்ப்பை தவிர்த்தார்.

கல்லூரி படிப்பை முடித்த பின்னர், நடிப்பில் ஆர்வம் இருந்ததால் நடிக்க போகிறேன் என தன்னுடைய தந்தையிடம் சொன்னபோது, அவருக்கு வரலட்சுமி நடிப்பதில் பெரிதாக உடன்பாடு இல்லை என்றாலும் மகளின் ஆசைக்காக அவரின் முடிவை ஏற்றுக் கொண்டார். சினிமா வாய்ப்பு தேடிய போது தான், முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக... விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Varalaxmi sarathkumar

மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவான இந்தப் படம், வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நடிகை வரலட்சுமியின் நடிப்பு பாராட்ட பட்டது.  குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் உள்ளன.  முதல் படத்தின் தோல்வியால் அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த வரலட்சுமி சரத்குமார், தெலுங்கு, கன்னடம், போன்ற மற்ற மொழிகளில் தன்னுடைய கவனத்தை திருப்பினார். 

தமிழகத்தில் 'கோட்' - சிறப்பு காட்சிக்கு நெருக்கடி? 80% திரையரங்குகள் ரத்து செய்ய முடிவு!


Varalaxmi sarathkumar

இவருக்கு தமிழில் மீண்டும் சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்து வரலட்சுமியின் நடிப்பு திறமைக்கு தீனி போட்டவர் இயக்குனர் பாலா. இயக்குனரும், நடிகருமான சசிகுமாரை ஹீரோவாக வைத்து இவர் இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. எனினும் இப்படத்தின் இசைக்காக இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது. பின்னர் தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய இவர் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடிப்பதில் பிஸியானார்.

Varalaxmi sarathkumar

இடையில் நடிகர் விஷாலின் காதல் சர்ச்சையிலும் சிக்கி மீண்ட வரலட்சுமி சரத்குமார், திருமணமே வேண்டாம் என இருந்த போது தான்... என்னுடைய 14 வருட நண்பரான நிக்கோலாய் சச்தேவ் என்கிற மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை, பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி வரலட்சுமி சரத்குமார் மற்றும் நிக்கோலாய் திருமணம் ஜூலை 2-ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள ரிசார்ட்டில் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இதில் வரலட்சுமி மற்றும் நிக்கோலாயின் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அந்த ஒரே விஷயத்துக்காக 23 பட வாய்ப்பை இழந்தேன்! நடிகை விந்தியா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

Varalaxmi sarathkumar

திருமணத்திற்கு பின்னர் ஜூலை மூன்றாம் தேதி நிக்கோலாய் மற்றும் வரலட்சுமி சரத்குமாரின் திருமண ரிசப்ஷன் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், வரலட்சுமி சரத்குமார் மும்பையில் கணவர் - மகளுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அவ்வபோது தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக விதவிதமான புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைதளத்திலும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தான் தற்போது வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய ஹனிமூன் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளார். இதில் வெளிநாட்டிற்கு தன்னுடைய கணவருடன் ஹனிமூன் சென்ற போது தன்னுடைய மகளையும் அழைத்துச் சென்றுள்ளார் சித்தி வரலட்சுமி. இது குறித்த புகைப்படங்களை இவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் ஆச்சர்யமாக பார்த்து வருவதுடன், வரலட்சுமி சிறந்த மனைவி மட்டும் அல்ல சிறந்த தாய் என தெரிவித்து வருகிறார்கள்.
 

Latest Videos

click me!