தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு நடித்த 'லியோ' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய், தன்னுடைய 68 ஆவது படமான 'GOAT' படத்தை, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க முடிவு செய்தார்.
GOAT Remix Songs
இதற்கு முன்னர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய, 'சென்னை 28', 'சரோஜா', 'கோவா', 'மங்காத்தா', 'மாநாடு', போன்ற படங்கள் வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்டது மட்டும் இன்றி, இளவட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடிகர் நாகை சைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டியை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் இயக்கிய, 'கஸ்டடி' திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
அந்த ஒரே விஷயத்துக்காக 23 பட வாய்ப்பை இழந்தேன்! நடிகை விந்தியா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
goat movie
எப்போதும் ஒரே மாதிரியான கதைக்களத்தை மையமாக வைத்து படம் எடுக்காதவர் வெங்கட் பிரபு என்பதால், நடிகர் விஜய்யை வைத்து இவர் இயக்கியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' திரைப்படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்கிற ஆர்வம் எழுந்துள்ளது. மேலும் தளபதி விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்த 'பிகில்' படத்திற்கு பின்னர் அப்பா - மகன் என மீண்டும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். விஜய்யின் சிறிய வயது கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகரையோ அல்லது டூப் வைத்து இயக்காமல், விஜய்யை AI தொழில்நுட்ப உதவியுடன் இளம் விஜய்யாக மாற்றி ரசிகர்கள் கண் முன் நிறுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. தளபதியின் இளம் வயது காட்சிகள் 'கோட்' பட ட்ரைலரிலேயே இடம் பெற்று சும்மா தெறிக்கவிட்டன.
Thalapathy Vijay
தளபதியை தவிர, 'GOAT' படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்திரி, பார்வதி நாயர், VTV கணேஷ் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைத்து நடித்துள்ளது. செப்டம்பர் 5-ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவுக்கான பணிகள் துவங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
படுக்கைக்கு அழைத்தாரா மம்மூட்டி; நடிகை சொன்ன பதில் என்ன?
goat movie
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் தினம் (ஒரு நாள் மட்டுமே), அதுவும் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்து வருகிறது. அந்த வகையில் கோட் திரைப்படத்திற்கும் செப்டம்பர் 5ஆம் தேதி, காலை 9 மணிக்கு தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் சிறப்பு காட்சியை ஒளிபரப்பி கொள்ளலாம் என அனுமதி கொடுத்துள்ளது.
GOAT Movie
ஆனால் புதுவை, ஆந்திரா, கேரளா போன்ற இடங்களில் விஜய்யின் கோட் திரைப்படம் காலை 6 மணி மற்றும் 7 மணிக்கு வெளியாக உள்ளதால் தமிழகத்தை சேர்ந்த பல ரசிகர்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று இப்படத்தை பார்க்க தயாராகி உள்ளனர். இது ஒரு புறம் இறுக்க, தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சியை வெளியிட, ஒரு டிக்கெட்டுக்கு 700 முதல் 800 ரூபாய் வரை கேட்டு விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதால், தமிழகத்தில் உள்ள சுமார் 80 சதவீத திரையரங்குகள் 'கோட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
என்னை ஏமாற்றி படங்களில் நடிக்க வைத்தனர்; முதன் முறையாக மனம் திறந்த ஸ்வர்ணமால்யா!
GOAT Movie
திரையரங்கு உரிமையாளர்களின் இந்த முடிவு, 'கோட்' படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க ஆர்வமாக காத்திருக்கும் ஏராளமான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு வேலை டிக்கெட்டுக்கு அதிக பணம் கேட்டு டிமாண்ட் செய்து வரும் விநியோகஸ்தர்கள் தங்களின் முடிவை மாற்றிக்கொள்ளும் நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் சிறப்பு காட்சியை வெளியிட முடிவு செய்வார்கள் என தெரிகிறது.