
நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி, வெளியிட்ட பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகள் தான் இப்போது கேரள திரையுலகை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. மலையாள திரையுலகை சேர்ந்த 18-க்கும் மேற்பட்ட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது மலையாள திரை உலக நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ளது அனைவரும் அறிந்ததே. இதனை தொடர்ந்து கேரள திரைத்துறை நடிகைகளுக்கு ஆதரவாக கோலிவுட் நடிகைகள் சிலரும் பேசி வருவது நாம் அறிந்ததே.
அதுமட்டுமல்ல தமிழ் திரையுலகிலும் இந்த "அட்ஜஸ்ட்மென்ட்" என்கின்ற ஒரு விஷயம் இருக்கிறது. ஆகையால் அதன் மீதும் இங்குள்ள பெரிய நடிகர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகைகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக பிரபல நடிகை ராதிகா, கடந்த சில நாட்களாக வெளியிட்ட பல தகவல்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் தளபதி விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களை சூசமாக சாடுவது போல இருந்தது.
இந்த விஷயத்தில் பெரிய நடிகர்களின் மௌனம் தவறாக சித்தரிக்கப்படும் என்றும், அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று என்னும் நடிகர்கள், தங்களுடன் இணைந்து பணியாற்றும் நடிகைகளுக்கு முதலில் எதாவது நல்லது செய்யட்டும் என்று பேசியிருந்தார் நடிகை ராதிகா.
ஹனி மூனுக்கு செல்லும் போது மகளையும் அழைத்து சென்ற சித்தி வரலட்சுமி சரத்குமார்! வைரல் போட்டோஸ்!
இது ஒருபுறம் இருக்க, பிரபல பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சுசித்ரா, கடந்த பல ஆண்டுகளாகவே சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். அவ்வப்போது பெரிய பெரிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து பகீர் அளிக்கும் பல விஷயங்களை அவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார். அண்மையில் கூட பிரபல டாப் நடிகர் ஒருவர் வீட்டில் மது பார்ட்டிகள் நடைபெறும் என்றும், அதில் போதை பொருட்கள் பயன்பாடும் இருக்கும் என்றும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார், பிரபல நடிகர் தனுஷோடு இணைந்து ஓரினசேர்கையாளராக இருந்து வந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை அவர் வெளியிட்டார். தொடர்ச்சியாக இப்படி பல விஷயங்களை பேசி வரும் பாடகி சுசித்ரா மீது, இப்பொது பிரபல நடிகை ஒருவர் அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அது குறித்த சில தகவல்களை தனது சமூக வலைதள பக்கங்களிலும் வெளியிட்டிருக்கிறார் அந்த நடிகை.
தமிழில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான நடிகர் ஜீவாவின் "கோ" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட் உலகில் அறிமுகமான நடிகை தான் ரீமா கல்லிங்கல். தமிழில் யுவன் யுவதி மற்றும் சித்திரை செவ்வானம் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் தான் நடித்திருக்கிறார் என்றாலும், மலையாள திரை உலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக பயணித்து வருபவர் ரீமா கல்லிங்கல். என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல இணை தயாரிப்பாளராக பல நல்ல திரைப்படங்களை தயாரித்து வழங்கிய ஒருவர் தான் ரீமா. ரீமாவின் திருமணம் கடந்த 2013ம் ஆண்டு கேரளாவில் நடந்த பொழுது, எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வரும் பலருடைய மருத்துவ செலவிற்காக, சுமார் பத்து லட்சம் ரூபாயை இவர் நன்கொடையாக கொடுத்தார். அது மட்டும் அல்லாமல் கேரளாவில் தனக்கென தனியே ஒரு நடன அகாடமியையும் இவர் நடத்தி வருகிறார். நடிப்பு, நடனம், பட தயாரிப்பு என்று பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் மீது தான் இப்போது சுசித்ரா பெரும் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
அண்மையில் ஒரு பேட்டியில் பங்கேற்று பேசிய பாடகி சுசித்ரா, பிரபல மலையாள திரைப்பட நடிகை ரீமா மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் இணைந்து, தங்கள் வீட்டிலேயே போதை பார்ட்டிகளை நடத்தியதாக கூறியிருந்தார். மேலும் கேரளாவில் பல இளம் நடிகைகள் ரீமா நடத்தும் இந்த போதை பார்ட்டிகளில் கலந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள ரீமா, "பாடகி சுசித்ரா ஏன் இப்படிப்பட்ட ஒரு செய்தியை பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. அடிப்படை ஆதாரம் எதுவுமே இல்லாமல் வெறும் பப்ளிசிட்டிக்காக மட்டும் அவர் இப்படி செய்திருப்பதாகத் தான் நான் நினைக்கிறேன். என்னைப் பற்றியும் எனது கணவர் பற்றியும் அவதூறாக அவர் பேசிய நிலையில், கண்டிப்பாக இந்த விஷயத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க விரும்புகிறேன்.
இப்பொழுது சிறப்பு விசாரணை குழுவிடம் புகார் அளித்திருக்கிறோம், அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்தையும் இனி சட்ட ரீதியாக நான் எதிர்கொள்வேன் என்று கூறியிருக்கிறார் ரீமா.
தமிழகத்தில் 'கோட்' - சிறப்பு காட்சிக்கு நெருக்கடி? 80% திரையரங்குகள் ரத்து செய்ய முடிவு!