கேரளாவின் கண்ணூரை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும், சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை தான் நிவேதா தாமஸ். பிரபல எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தான் இவர் தனது பட்டப் படிப்பை முடித்தார். சிறு வயது முதலையே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 2008ம் ஆண்டு தமிழில் வெளியான தளபதி விஜயின் "குருவி" திரைப்படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருப்பார், அப்போது அவருக்கு வயது 13.
தனது கல்லூரி படிப்பை முடித்த பிறகு திரைத்துறையில் முழுமையாக களம் இறங்கிய நடிகை நிவேதா தாமஸ், தொடக்கத்தில் மலையாள மொழி திரைப்படங்களில் தான் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான "போராளி" என்கின்ற சசிகுமாரின் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் அவர் நடித்து வருகிறார்.
34
Actress Nivertha Thomas
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் மற்றும் மலையாள மொழியை காட்டிலும் தெலுங்கு மொழியில் தான் இவர் அதிகளவிலான படங்களை நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் கடந்த 2020ம் ஆண்டு பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான, தர்பார் திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்து அசத்தியிருந்தார் நிவேதா தாமஸ்.
44
Kollywood Actress Nivetha
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் "ராஜ ராஜேஸ்வரி", "மை டியர் பூதம்" மற்றும் "சிவமயம்" போன்ற சின்னத்திரை நாடகங்களிலும் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தனது ஐந்தாவது வயது முதல் இவர் சின்னத்திரை நடிகையாக பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.